பருவநிலை மாறுபாடு காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரிக்கை களை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் அடுத்த 100ஆம் ஆண்டுக்குள் அதாவது 2,100 ஆம் ஆண்டுக்குள் சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட கடலோர பெரு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வு எச்சரித்துள்ளது.
பருவ நிலை மாற்றம் உலகம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது.
அதிக அளவு மழை, வரலாறு காணாத வறட்சி, புயல் என உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் பருவ நிலை மாறுபாடே முக்கிய காரணமாக சொல்லப்படு கிறது.
புவி வெப்பயமாதால், பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்வதாக நிபுணர்கள் எச்சரித்து வருகிறன்றனர். கடல் நீர் மட்டம் உயர்வது மனித குலத்திற்கும் மனிதன் வாழ்வியல் சூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதோடு, கடலோரம் உள்ள மிகப்பெரிய நகரங்களும் மூழ்கும் அபாயம் இருப்பதாக அடிக்கடி நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கையாக உள்ளது. இதனால் கார்பன் உமிழ்வை முடிந்த அளவுக்கு குறைத்து இந்த பூமிப்பந்தை எதிர்கால தலைமுறையினருக்காக நாம் பாதுகாத்து வைக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
இந்த நிலையில், காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை சார்ந்த காலநிலை மாறுபாடு ஆகியவை பூமிக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் என்று அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஆய்வுகளை செய்து வரும் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில் கடல் நீர் மட்டம் உயர்வால் சென்னை, கொல்கத்தா உள்பட ஆசியாவின் மிகப்பெரிய நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வெப்ப நிலை உயர்வு காரணமாக கடல் நீர் விரிவடை வதோடு பனிப்பாறைகளும் உருகுகின்றன. இதனால், கடல் நீர் மட்டம் அதிகரிக்கிறது. கடல் நீர் மட்டம் உயர்வு பிராந்திய அளவில் மாறுபடுகிறது. இதனால், சில குறிப்பிட்ட இடங்களுக்கு அதிகமான நீர் சேரும். இதனால் கடற் கரையை ஒட்டியிருக்கும் நகரங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கக் கூடும். குறிப்பாக ஆசியாவில் உள்ள 6 பெரு நகரங்கள் பாதிப்பை எதிர்கொள்ளலாம். இந்தியாவில் சென்னை, கொல்கத்தா ஆகிய இரண்டு நகரங்களும் இந்த ஆபத்தில் இருக்கின்றதாம்.
தாய்லாந்தில் பாங்காக், இந்தோனேசியாவில் மணிலா, மியான்மரில் யாங்கோன், வியட்நாமில் ஹோசி மின்சிட்டி ஆகிய நகரங்களும் இந்த அபாயத்தில் உள்ளன. பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் அடுத்த 100ஆம் ஆண்டுக்குள் அதாவது 2,100 ஆம் ஆண்டுக்குள் இந்த நகரங்கள் கடுமையாக பாதிக்கப் பட வய்ப்பு இருப்பதாகவும் ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது.