சென்னை, மார்ச் 10 தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படவிருப் பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் ஏப்.1-ஆம் தேதி 29 சுங்கச் சாவடிகளிலும், செப்.1-ஆம் தேதி மற்ற சுங்கச்சாவடிகளிலும் கட்ட ணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத் தின் திட்ட அமலாக்கப் பிரிவு சார்பில் சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முன்மொழிவு தயாரிக்கப் பட்டுள்ளது. இது வரும் 25-ஆம் தேதிக் குள் ஒன்றிய சாலை மற்றும் போக்கு வரத்து அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அமைச்சகத்தின் ஒப்பு தலுக்குப் பிறகு ஏப்.1ஆம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கார் மற்றும் இலகு ரக வாகனங்களுக்கு 5 சதவீதமும், கனரக வாகனங்களுக்கு 10 சதவீதமும் கட்டண உயர்வு அம லாகும் என தெரிகிறது. அவ்வாறு 29 சுங்கச்சாவடிகளில்
ஏப்.1-ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த் தப்படும் பட்சத்தில் சென்னைக்கு அருகில் உள்ள சுங்கச்சாவடிகளில் கார்கள் ஒருவழிப் பயணத்துக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை கூடுதலாக செலுத்த வேண்டியி ருக்கும் சென்னையில் இருந்து மதுரை, கோவை, போன்ற நகரங்களுக்கு செல்ல ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.
நகர எல் லைக்குட்பட்ட பகுதிகளில் 40 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்த நிலையில், சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதி களில் உள்ள பரனூர், வானகரம் உள் ளிட்ட 5 சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட இருப்பது குறிப்பிடத் தக்கது.