சென்னை, மார்ச் 10 கோடை காலத்தில் ஏற்படும் மின்தேவையை பூர்த்தி செய்வது தொடர்பான ஆய்வு கூட்டம் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு ஆலோசனை மேற் கொண்டார்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, விவசாயிகள் எத்தனை மின் இணைப்பு வைத்திருந்தாலும் இலவச மின்சாரம் அளிப்பதில் மாற்றம் இல்லை. 2021 பிப்ரவரி 6ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் 25ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.அதில் டெல்டா பகுதியில் 12 மணி நேரமும் மற்ற பகுதிகளில் 9 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினாது தேர்தலுக்காக அந்த நேரத்தில் அறிவிக்கப்பட்டது.தற்போது மின் தேவை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 18 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவை ஏற்பட்டுள்ளது. 1562 மெகா வாட் மின்சாரம் இது வரை இல்லாத அளவுக்கு 8 ரூபாய் 50 பைசா அளவில் ஒப்பந்தம் விடப்பட உள்ளது. முழு மின்சார தேவையை பூர்த்தி செய்ய, சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 316 துணை மின்நிலையங்களும் நடைமுறைக்கு வர மும்முரமாக பணிகள் நடந்து கொண்ருடிக்கின்றன. ஒட்டு மொத்தமாக 18 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு முதல் இதே போல் கோடை காலத்தில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி 11 நாளைக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது என்று அமைச்சர் கூறினார்.