மெப்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ரூ.443 கோடியில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 13- தாம்பரம் மெப்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் யூனிட் ஒப்புதல் குழு கூட்டம் மண்டல மேம்பாட்டு ஆணையர் அலெக்ஸ் பால் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ரூ.443.11 கோடி மதிப்பிலான 11 புதிய தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 9 புதிய சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனங்களும், 2 ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களும்அடங்கும்.

இந்த புதிய முதலீடுகள் மூலம் சென்னையின் புறநகர் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி மேலும் வேகமெடுக்கும். இந்த 11 புதிய திட்டங்கள் மூலம் பல்வேறு தொழில் துறைகளில் மொத்தம் 2,427 புதிய நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

இந்த முதலீடுகள் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், தளவாட சேவைகள் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த முதலீட்டு திட்டங்கள் சென்னையின் தொழில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், இளைஞர் களுக்கு வேலைவாய்ப்புகளையும் அளிக்கும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *