“இருப்பவர்களுக்கும் இல்லாதவர்க ளுக்கு மிடையே மோதலை உருவாக் கும் மார்க்ஸ் சிந்தனை” – ஆளுநர் ஆர்.என். ரவி
சென்னை ராஜ்பவனில் ஹிந்துத்துவா கோட்பாட்டாளர் தீன்தயாள் உபாத்யாயா சிந்தனைச் சிதறல்கள், தீன்தயாள் உபாத்யாயா ஒருங்கிணைந்த மனிதநேயம் ஆகிய தலைப் பிலான நூல்கள் வெளியீட்டு விழா நடை பெற்றது. இதில் பேசிய ஆளுநர் ரவி, சனாதன தர்மம் என்பது விரிவானது. கணியன் பூங் குன்றனாரின் புறநானூறில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தர்மம் என்பதை நாம் மதம் என புரிந்து கொண்டுவிட்டோம். அப்படி புரிந்து கொண்டதால் மாபெரும் தவறு செய்து விட்டோம் என்றார்.
மேலும், நமது இந்திய கொள்கைகள் மேற் கத்திய சிந்தனையைத் தொடர்ந்ததாக இருந் தது. டார்வினின் கோட்பாடு, மார்க்ஸின் சித்தாந்தம், இறையியல், ரூசோ கோட்பாடு என்பவை எல்லாம் இந்தியாவின் தேசியத்துவ வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தின. இந்தி யாவை கார்ல் மார்க்ஸின் சிந்தனை சிதைத்துப் போட்டது. ஆனால் அந்த சிந்தனை இப் போது புறக்கணிக்கப்பட்டிருக்கிறது – என்றும் ஆளுநர் ரவி கூறினார்.
மார்க்ஸின் சித்தாந்தமானது இல்லாதவர் கள் மேலே உயர வேண்டும் என்கிறது. இது இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கு மான மோதலை உருவாக்குகிறது. இது சமூ கத்தில் பிளவுகளுக்கு காரணமாகவும் நிரந் தரமான மோதலையும் உருவாக்கக் கூடியது – என்றும் விமர்சித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.