பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் உறுதிமொழி நிகழ்ச்சி!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

திருச்சி, ஆக.12- திருச்சி மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 11.08.2026 அன்று காலை 10 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது.

தமிழ்நாட்டிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதை பொருட்களை பயன்படுத்து வதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டினை உருவாக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரலை காணொலிக் காட்சியாக துவக்கி வைக்கும் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியேற்றல் நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் பட்டயப்படிப்பு மாணவர்கள் 107 பேர் மற்றும் பேராசிரியர்கள் இராஜேஷ், கோகிலவாணி, சக்தி, தினேஷ், பிரகதி ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழியேற்றனர்.

போதைப் பழக்கத்திற்கு தானும் ஆளாகாமல் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களும் ஆளாகாமல் தடுத்து போதைப் பொருட்கள் இல்லாத மாநிலத்தை உருவாக்குவோம் என்று கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழியேற்றனர். 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் போதைப் பொருட்கள் கடத்துதல் மற்றும் சட்ட விரோத போதைப் பொருள் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை புகார் செய்வதற்கு வசதியாக அறிமுகப்படுத்தப்பட்ட DRUG FREE TN செயலி குறித்த விழிப்புணர்வும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *