ஒரே நாளில் 600 கல்லூரி மாணவிகளுக்கு தந்தை பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்?” புத்தகங்களையும், பெரியாரின் கொள் கையையும் கொண்டு சேர்த்தார் தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஆலடி எழில் வாணன்!
8.3.2023 அன்று அய்ன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி மற்றும் அய்ன்ஸ் டீன் கலை மற்றும் அறிவியல் கல் லூரிகளில் மகளிர் நாள் கொண்டாட் டங்கள் சிறப்பாக நடைபெற்றன. .
ஆலடி எழில்வாணன் அவர்கள் மாணவர்கள் மத்தியில் பெண் உரிமை மற்றும் சமூக நீதியை அனைத்துத் தரப்பினரும் உள் வாங்கிக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என வலி யுறுத்தினார்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, பெண்ணுரிமைக்காகப் போராடிய தந்தை பெரியாரின் புத்தகங்களில் மிக முக்கியமான “பெண் ஏன் அடிமையானாள்?” புத்தகத்தை 600 மாணவிகளுக்கு வழங்கி பெரியாரின் கொள்கைகளை கல்லூரி மாணவி களிடம் கொண்டு சேர்த்தார்.