வல்லம், மார்ச் 10- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் உலக மகளிர் நாள் விழா கடைப் பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணை வேந்தர் செ.வேலுசாமி தலைமையுரை யாற்றுகையில்:-
வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் பெண்கள் சந்திக்கும் பிரச்சினை கள் குறித்தும் அதனைத் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்தும் விளம் பரங்களை கண்டு பெண்கள் மயங் கிடக் கூடாது என்றும் அறிவுறுத் தினார்.
விருதுகள் வழங்கல்!
இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கான உயரிய விருதான டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி அம்மையார் விருதினை டாக்டர் ராதிகா மைக்கேல் அவர்களும் (சிறந்த என் ஜி ஓ மற்றும் நீட்டிப்பு நடவ டிக்கைகளுக்கான), அன்னை மணியம்மையார் விருதினை பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.மல்லிகா (சிறந்த பெண் கல்வியாளர்) அவர்களும், சிறந்த பெண் தொழில் முனை வோருக்கான விருதினை எஸ்.ராஜேஸ்வரி, மேலாண் இயக்குநர், டிஎன்பி பகுப்பாய்வு ஆய்வகம் பி.லிமிடெட், திருச்சி அவர்களும், கல்பனா சாவ்லா விருதினை மாணவி ஜெ.ஜெயசிறீ (சிறந்த விளையாட்டு வீரர்) அவர்களுக்கும் மற்றும் மேரி க்யூரி விருதினை டாக்டர் கே.கீதா (சிறந்த ஆராய்ச் சியாளர்), துறை தலைவர் உயிரி தொழில்நுட்பவியல் துறை ஆகி யோருக்கு விருதுகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவ னத்தின் (நிகர் நிலைப்பல்கலைக் கழகம்) முதன்மையர் பேராசிரியர் ஜார்ஜ் அவர்கள் கலந்துகொண்டு பெண்கள் பாதுகாப்பு குறித்தும் அவர்களின் முன்னேற்றம் குறித் தும் பேசினார்.
மேலும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன மாணவர்களின், ஆலோச கர் லில்லி புஷ்பம், பெண்கள் நாள் நல்வாழ்த்துகளை வழங்கினார்.
இதில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மேலாண்மைத் துறை, கணிப்பொறி அறிவியல் துறை, வணிகவியல்துறை மற்றும் சமூகப்பணித்துறை மாணவ, மாணவிகளும் கலந்து கொண் டனர். இறுதியாக நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் இயற்பியல் துறை பேராசிரியர் காயத்திரி நன்றி கூறினார்.