அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேண்டுகோள்
சென்னை, நவ.3 டெல்டா விவசாயிகள் சம்பா சாகுபடி பணி களில் தீவிரமாக ஈடு பட்டு வரும் நிலையில், அதுதொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆலோ சனை நடத்தினார். அத்துடன், விவசாயி களுக்கு முக்கிய ஆலோ சனைகளையும் வழங்கியுள்ளார்.
காவிரி டெல்டா குறுவைப் பாசனத்திற் காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை யில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால், கருநாடகம் உரிய அளவு தண்ணீரை திறக்காததாலும், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததாலும் மேட்டூர் அணை நீர்மட் டம் குறைந்தது. இத னால் மேட்டூர் அணை யில் இருந்து டெல்டா வுக்கு சரியான அளவு தண்ணீர் திறக்கப்படாத நிலையில், கடந்த அக் டோபர் 10ஆம் தேதி ஒட்டு மொத்தமாக நிறுத்தப்பட்டது.
குறுவை சாகுபடி பொய்த்த நிலையில், ஹெக்டெர் ஒன்றுக்கு 13,000 ரூபாய் இழப்பீடு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டார். காய்ந்த பயிர் களை கணக்கெடுக்கும் பணிகளும் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த நிலையில் டெல்டா பாசன மாவட்டங்களில் தற்போது விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் நேற்று (2.11.2023) மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப் பில், “நவம்பர் 15ஆம் தேதிக்கு முன்பு மழைப் பொழிவு பெறப்படின், குறுகிய கால நெல் ரகங்களான ஆடுதுறை 45, 53, 56, 57, கோ 51, அம்பை 16 போன்ற ரகங் களை நேரடி விதைப்பு முறையில் பயிரிடலாம். பருவமழை பொய்த்தால், குறுகிய காலப் பயிர் களான பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங் களை, மார்கழி பின் பட்டத்தில் சாகுபடி செய்யலாம்” என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. மழைநீரை நம்பி சம்பா பயிரிடும் டெல்டா விவ சாயிகள் தற்போது, நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்களில் வறட்சி ஏற்படும் பட்சத் தில் வறட்சியைத் தாங் கும் தன்மையை ஏற்படுத் தும் பிங்க் பிக்மெண்ட் டட்ஃ பேக்கல்டேடிவ் மெத்தைலோ ட்ரோஃப் என்ற உயிரினக் கார ணியை ஒரு லிட்டருக்கு ஒரு மில்லி என்ற வீதத் தில் கலந்து கைத் தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும் என்றும், நிலத்தடி நீரை (கிணறுகள், உறைக் கிணறுகள், ஆழ்துளை குழாய்க் கிணறுகள்) தேவைக்கு ஏற்ற வகை யில் சிக்கனமாக விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் எனவும் செய்திக் குறிப்பில் அறி வுறுத்த ப்பட்டுள்ளது.
மேலும், சம்பா பரு வத்தில் பயிர்க் காப்பீடு செய்ய அறிவிப்பு செய் யப்பட்டுள்ள கிராமங் களில் உள்ள அனைத்து விவசாயிகளும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்ய வேண் டும் என்றும் முக்கிய அறிவுத்தல் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.