திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
நாகை, மார்ச் 11- தமிழ்நாட்டில் முதல் முறை யாக, நமக்கு நாமே திட்டத்தின் கீழ், அரசின் உதவியுடன் மீனவர்கள் ஒன்றிணைந்து சொந்த நிதியில் நாகை மாவட்டத்தில் நம்பி யார் நகரில் கட்டியுள்ள புதிய மீன்பிடித் துறை முகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்து மீனவர்களுக்கு பாராட்டு தெரிவித் தார்.
நாகை மாவட்டம் நம்பியார் நகரில் அமைக்கப்பட்ட புதிய மீன்பிடித் துறை முகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக 9.3.2023 அன்று திறந்து வைத்தார்.
நம்பியார் நகரில் வசித்து வரும் சுமார் 1,300 மீனவக் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ரூ.11.43 கோடி ரூபாயை திரட்டி கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த துறைமுகக் கட்டுமானப் பணி ரூ.34.3 கோடி செலவில் நாகை மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட் டுள்ளது.
கடலோர மாவட்டங்களின் ‘முதன்மை மீனவ பஞ்சாயத்து’ தகுதி தொடர்பாக நம்பியார் நகர் மீன்பிடி கிராமத்திற்கும், அக் கரைப்பேட்டைக்கு அருகில் உள்ள மக் களுக்கும் இடையே வன்முறை மோதல்கள் வெடித்ததை அடுத்து, முன்னுரிமை அடிப் படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
நம்பியார் நகரில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ.34 கோடியில் புதிதாக சிறிய மீன்பிடி துறைமுகம் கட்டுமானப் பணிகள், கடந்த 2020 டிசம்பரில் தொடங்கி நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் நிறைவடைந்த தையடுத்து, மீனவர்களின் பயன்பாட்டிற்காக இத்துறைமுகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் சென்னையிலிருந்து காணொலி
வாயிலாக திறந்து வைத்தார். இந்த திட்டத் துக்கு அரசு சார்பில் ரூ.22.87 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதையொட்டி, புதிய மீன்பிடி துறை முகத்தில் நடைபெற்ற விழாவில், நாகை கூடுதல் ஆட்சியர் ம.பிரதிவிராஜ், மீன்வளத் துறை அதிகாரிகள், நம்பியார் நகர் மக்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
182 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள இந்த துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான படகுகள் நிறுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. இத்துறைமுகம் திறக்கப்பட்ட தற்கு, நம்பியார் நகர் மீனவர்கள் மட்டுமின்றி அப்பகுதி மக்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அனைத்து குடும்பங்களும் இந்த திட்டத்திற்கு பங்களிக்க முன்வந்தாலும், பல குடும்பங்களுக்கு அது மிகப்பெரிய சவாலாக மாறியது.“ கரோனா தொற்றுநோய் மற்றும் மடி வலைகள் மீதான தடை எங்களை பெரிதும் தாக்கியது. நாங்கள் கடன்பட்டோம். ஆனால் நாங்கள் எங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தோம்” என்கிறார் மீனவப் பிரதிநிதி இ.எம்.வீரப்பன்.
துறைமுகத்திற்கு கூடுதலாக பல வசதிகள் தேவை. எனவே அரசின் உதவியுடன் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய் வதில் நம்பிக்கையுடன் உள்ளோம் என்றனர்.