ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், 4 மாதங்களுக்குப் பிறகு திருப்பி அனுப்பி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதனால் மீண்டும் சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி, அனுப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
சட்ட விவகாரங்களைத் தாண்டி, ஆன்லைன் சூதாட்டங்களைக் குற்றமாகப் பார்க்காத ஒன்றிய பா.ஜ.க. அரசு, ஆன்லைன் சூதாட்டம் மூலம் வருமானம் ஈட்டினால், அதற்கு வருமான வரிகட்டச் சொல்கிறது.
சூதாட்டத்தை மய்யமாகக் கொண்ட மகாபாரதக் கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் எனச் சொல்கிற அரசியல்வாதிகள்தான், சூதாட்ட வருமானத்தில் பங்கு கேட்கும் ஆட்சியாளர்களாக அமர்ந்துள்ளனர். ஆளுநர் அதன் ஒரு அங்கமாக இருக்கிறார். ஆரிய-சூத்திரப் போரில் ஆன்லைன் சூதாட்டம் அடையாளமாகி நிற்கிறது!
– ‘முரசொலி’, 12.3.2023