படத்திற்கு மாலை அணிவித்து கழகத் தோழர்கள் உறுதிமொழி ஏற்பு (10.3.2023)அன்னை மணியம்மையார் பிறந்த நாளான 10.3.2023 அன்று தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் விவரம் வருமாறு:
தாராபுரம்
தாராபுரம் கழக மாவட்டத்தின் சார்பாக அன்னை மணியம்மையார் அவர்களின் 104ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தாராபுரம் நகர தி.மு. கழக செயலாளர் பொறியாளர் சு.முருகானந்தம், தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் கு.பாப்பு கண்ணன், நகரக் கழகத் துணைச் செயலாளர் தவச் செல்வன், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார் , அய்யப்பன், திராவிடர் கழக மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ராதா, பொதுக்குழு உறுப்பினர் க.சண்முகம், தொழிலாளர் அணி மாவட்ட பொருளாளர் ப.மணி, ஒன்றிய தலைவர் நாத்திக சிதம்பரம், ஒன்றிய செயலாளர் முருகன், நகர பக அமைப் பாளர் பெரியார்நேசன், அன்புச்செல்வன், ராசு, மேனாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் செ. முத்துகிருஷ்ணன், சாந்தப்பன், வளவன் வினோத் (முகாம் செயலாளர் விசிக) ஆகியோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி
திராவிடர் கழக தலைவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம் மையார் பிறந்த நாள் விழா கருத்தரங்கம் குமரி மாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். அன்னை மணியம்மையார், மாவட்ட கழக மேனாள் தலைவர் ஆ.சண்முகையா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கலை இலக் கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் ஆகியோர் உரையாற்றினர்.
பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு கருத்துரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான் சிஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஸ் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பெரியார் தாஸ் தொழிலாளரணி அமைப்பாளர் ச.ச. கருணாநிதி, காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் ஜோயல், திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இரா.கோகுல் , ச.ச.மணிமேகலை, மாஸ்டர் டெனிபோஸ், பி.கென்னடி, ந.தமிழ் அரசன், மகா ராஜன், மாணவர் ஆகாஷ் , மாஸ்டர் இரா.முகிலன் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி
அரூர் கழக மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் பகுத் தறிவு கலைத்துறை சார்பாக அன்னை மணியம்மையார் 104ஆவது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் படிப்பகத்தில் நடந்த நிகழ்வில் மாவட்ட கழக செயலாளர் பூபதிராஜா வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட கழகத் தலைவர் தங்கராஜ் தலைமை ஏற்று அன்னை மணியம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக எடுத்துரைத்தார். மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி மணியம்மையாரின் படத்தை திறந்து வைத்து எழுச்சி உரை வழங்கினார். நாத்திக இயக்கத்தின் முதல் பெண் தலைவராகவும், ,தந்தை பெரியாரின் கொள்கை இணைய ராகவும், திராவிடர் கழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், திராவிடர் கழகத்தையும் தந்தை பெரியாரையும் இரு கண் களாக கருதி அன்னையார் இருந்ததை நினைவூட்டி அவர் வழியில் நடக்க உறுதிமொழி ஏற்க வேண்டினார்.
தமிழ்நாட்டிற்கு அன்னை மணியம்மையார் பிறந்த தினமே ‘மகளிர் தினம்’ என்று மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி முத்தாய்ப்பாக குறிப்பிட்டார். மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன் சிறப்புரையாற்றும் பொழுது,அன்னை மணியம்மையார் ஏற்றுக்கொண்ட கொள்கை பயணத்தையும், தடுமாறாமல் அவர் ஆற்றிய கழகப் பணிகளையும், இராவண லீலா நடத்தி இந்திய நாட்டையே திராவிடர் கழகத்தின் கொள்கை வீரியத்தை அறிய செய்ததையும் நினைவு கூர்ந்து, தந்தை பெரியார் வழியில், அன்னை மணியம்மையார் வழியில் ஆசிரியர் வீரமணி அவர்களின் லட்சிய பயணத்தையும் விளக்கி உணர்ச்சி உரை நிகழ்த்தினார்.
புதிய மாவட்ட கழக பொறுப்பாளர்களுக்கு மாநில அமைப்பு செயலாளர் மாநில கலைத்துறை செயலாளர் இணைந்து சிறப்பு செய்தனர். தந்தை பெரியார் அவர்களால் திராவிட மணி என்று பெயர் சூட்டப்பட்ட கழகத் தொண்டரின் மகளுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது. அன்றைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து திராவிட மணி அவர்கள் மகளிர் அணியில் பணியாற்றிட இசைவு தெரிவித்தார். திராவிட இயக்கக் கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டு நிகழ்வு முடியும் வரையிலும் அமர்ந்திருந்த 90 வயது மூதாட்டி சின்ன பாப்பா அவர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது
முன்னதாக அம்பேத்கர் இரவு பாடசாலை ஆசிரியர் ராகுல், இளைஞர் அணி சிவானந்தம் ஆகியோர் கருத்துரை வழங்கினர். திராவிடர் கழகத்தில் ஏன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன் நிகழ்வில் பங்கேற்ற மகளிருக்கு விளக்கம் அளித்தார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஆசிரியை ஜீவிதா ஏற்புரையோடு நன்றியுரை வழங்கினார். அரூர் நகரத்தில் நடக்க இருக்கும் அரூர் கழக மாவட்ட தொடக்க விழாவில் திரளானவர்கள் பங்கேற்று சிறப்பிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்வில் இளைஞர் அணி சாய்குமார், நகர கழக அமைப்பாளர் மணி சாந்தலட்சுமி, தனலட்சுமி சிலம்பரசி, அரிஷ், கவின்நிதி, பெரியார் பிஞ்சு பொழில் நிதி மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
தாராபுரம் பெரியார் திடல்
தாராபுரம் பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் 104ஆவது பிறந்த நாள் விழா மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ராதா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் க.சண்முகம், தொழி லாளர் அணி மாவட்ட பொருளாளர் ப.மணி, ஒன்றிய தலை வர் நாத்திக சிதம்பரம், ஒன்றிய செயலாளர் முருகன், நகர பக அமைப்பாளர் பெரியார்நேசன், அன்புச்செல்வன், ராசு, மேனாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் செ.முத்துகிருஷ் ணன், சாந்தப்பன், மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப் பாளர் க.செல்வராஜ், திமுக. தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ். தனசேகர், நகர் மன்ற தலைவர் கு.பாப்புகண்ணன்,
பொறியாளர் திமுக. சு.முருகானந்தம், நகர செயலாளர் திமுக. நகர துணை செயலாளர் தவச்செல்வன் (திமுக.) வள வன் வினோத் (முகாம் செயலாளர் விசிக). மாவட்ட பிரதிநிதி அய்யப்பன் சரண்ராஜ், திமுக.பன்னீர்செல்வம், ச.சிறீதர் நகர் மன்ற உறுப்பினர், அய்டெக் அன்பழகன் நகர் மன்ற உறுப் பினர் திமுக, பைக் செந்தில் திமுக. ஆகியோர் பங்கேற்றனர்.
கோவை
கோவையில் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர் களின் 104ஆவது பிறந்தநாள் விழா 10.3.2023 அன்று ஜிடி நாயுடு நினைவு பெரியார் படிப்பகம் மற்றும் பெரியார் புத்தக நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் கழக மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன், மாவட்ட கழக காப்பாளர் ம.சந்திரசேகர், விடுதலை வாசகர் வட்டம் அமைப் பாளர் கு.வெ.கி செந்தில், வழக்குரைஞர் பொன் துரைசாமி, கோவிந்தராஜ், மே.ப. ரங்கசாமி, கருப்புசாமி, எஸ்,ராமு, புத்தக நிலையம், படிப்பக பொறுப்பாளர் அ.மு.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
குடியாத்தம்
குடியாத்தம் புவனேஸ்வரிப்பேட்டை, லிட்டில்பிளவர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 104ஆவது பிறந்தநாள் விழாவில் வேலூர் மண்டல மகளிரணி செயலாளர் ச.ஈஸ்வரி தலைமையில் பெரியார் சிலைக்கும், அன்னையார் படத்திற்கும் மாலை அணிவித்தனர்.
கழக தோழர்கள், மகளிரணி, மகளிர் பாசறைத் தோழர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
குடியாத்தம் புவனேஸ்வரிப் பேட்டை லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் “அன்னை மணியம்மையாரின் 104ஆவது பிறந்தநாள் விழா மற்றும் உலக மகளிர் தினம்” சிறப்பாகவும், வெகு விமர்சனமாகவும் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளியின் செயலர் ச. இரம்யா கண்ணன் வரவேற்புரை வழங்கினார். வேலூர் மண்டல மகளிரணி செயலாளர், பள்ளியின் தாளாளர் ச.ஈஸ்வரி தொடக்க உரைய £ற்றினார். மேலும் இவ்விழாவிற்கு மாவட்ட மகளிரணி தலை வர் ச. கலைமணி தலைமையேற்று உரையை ஆற்றினார்.
மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சு.வசுமதி இணைப் புரை வழங்கினார். இந்நிகழ்விற்கு மண்டல மகளிரணி செயலாளர் ந.தேன்மொழி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் சி.லதா, மண்டல தலைவர் வி.சடகோபன், மாவட்ட தலைவர் இர.அன்பரசன், பொதுக்குழு உறுப்பினர் வி.இ.சிவக்குமார், மாவட்ட ப.க.தலைவர் மா.அழகிரிதாசன், நகர அமைப்பாளர் வி.மோகன், நகர தலைவர் சி.சாந்தகுமார் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
இக்கருத்தரங்கில் மாநில துணைத்தலைவர் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி. லதா, வேலூர் மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் பெ.இந்திராகாந்தி, வசந்திலட்சுமிபதி மற்றும் வெ. தமிழரசி கலந்துகொண்டு, உலக மகளிர் நாள் உரிமைகள் வரலாறு மற்றும் அன்னை மணியம்மையார் சிறப்புகளை எடுத்துரைத் தனர். நகர மகளிர் பாசறை தலைவர் இரா.இராஜகுமாரி இறுதியாக நன்றியுரை கூற இனிதே நிறைவுற்றது.
கருத்தரங்கிற்கு ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர் கள், கழகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மகளிர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஈரோடு
ஈரோடு பெரியார் மன்றத்தில் திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு.த.சண்முகம் தலைமையில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
மாநகர தலைவர் கோ.திருநாவுக்கரசு அன்னை மணியம் மையார் படத்துக்கு மாலை அணிவித்தார். மாவட்டதிராவிடர் கழக துணைத் தலைவர் வீ.தேவராஜ் பெரியார் மன்றம் முன்பு கழகக் கொடியேற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் ப.காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர்கோ.பாலகிருஷ்ணன், பெரியார் படிப்பக வாசகர் வட்டம் தலைவர்பி.என்.எம்.பெரியசாமி, மாநக அமைப்பாளர் சா.ஜெபராஜ் செல்லத்துரை,பெரியார் படிப்பக வாசகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம்
10.3.2023 அன்று சிதம்பரம் கழக மாவட்டம் சிதம்பரம் பெரியார் படிப்பகத்தில் அன்னை மணியம்மையாரின் 104ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த மணியம்மையார் படத்திற்கு மாவட்ட திராவிடர் கழக தலைவர் பூ. சி. இளங்கோவன் தலைமையில் மாவட்ட செயலாளர் அன்பு சித்தார்த்தன் மாவட்ட இணைச் செயலாளர் யாழ், திலீபன் மாவட்ட அமைப்பாளர் கண்ணன் கழகத் தோழர்கள் செல்வரத்தினம் பொய்யாமொழி ஆசீர்வாதம் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தஞ்சை
தஞ்சாவூர் பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா நடைபெற்றது. அன்னை மணியம்மையார் படத்துக்கு மாலை அணிவித்து கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை செலுத்தினர். கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கிராமப்பிரச்சார ஒருங்கிணைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், நெல்லுப்பட்டு இராமலிங்கம், பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் கோபு,பழனிவேல், தஞ்சை ஆறுமுக அடிகளார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூர்
அன்னை மணியம்மையார் 104ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அன்னையார் படத்திற்கு மாவட்ட விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் எம்.என்.அன்பழகன் மாலை அணிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் பெ.கலைவாணன், கந்திலி ஒன்றிய தலைவர் பெ. ரா. கனகராஜ், சுந்தரம்பள்ளி ஒன்றிய தலைவர் கோ.சங்கர், மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.சுரேஷ் குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் மா. சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இசைப்பிரியன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் பாலாஜி, முத்து மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.