தொழில்நுட்பக் கல்வி இயக்கக இயக்குநர் ஆர்.லலிதா அய்.ஏ.எஸ். – தொழில் முனைவர் இராஜமகேஸ்வரி ஆகியோர் பரிசளித்து பாராட்டு
வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து உரை
வல்லம், மார்ச்12 தஞ்சை வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் 35 ஆவது ஆண்டு விழா 11.03.2023 சனிக்கிழமை மாலை 6-மணிக்கு பெரியார் அறிவு மய்யத்தின் முத்தமிழ் அரங்கில் நடை பெற்றது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்திட, பெரியார் பாலிடெக்கினிக் முதல்வர் பேராசிரியர் ஆர். மல்லிகா வரவேற்பு ரையாற்றினார்.
கல்விப்புல முதன்மையர் பேராசிரியர் ஜார்ஜ் 2022 -2023 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆண்டறிக்கையினை வாசித்தார். ஓராண்டில் நடைபெற்ற பல்கலைக்கழக முக்கிய நிகழ்வு களையும், சிறப்புமிக்க சாதனைகளையும், பல்கலைக்கழகம் பெற்ற பாராட்டுகளையும் பட்டியலிட்டார்.
இப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பணி யாளர்களின் குழந்தைகளுக்கும், பெரியார் புரா கிராமங் களில் இருந்து பயிலும் மாணவர்களுக் கும், மதிப்பெண் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்குமாக இந்த ஆண்டு 2320 மாணவர்களுக்கு இரண்டு கோடியே இருபது லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. மேலும் சேர்க்கை நுண்ணறிவு ஆய்வகம், இயந்திர கற்றல் ஆய்வகம், டேட்டா சையின்ஸ் ஆய்வகம், ரோபேடிக்ஸ் ஆய்வகம், தானி யங்கி வாகன ஊர்தி ஆய்வகம் உள்பட பல ஆய்வ கங்கள் இந்த ஆண்டு தொடங்கப்பட்டது என குறிப்பிட்டார்.
முதன்மை விருந்தினரான தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்கக இயக்குநர் ஆர்.லலிதா, அய்.ஏ.எஸ். தனது சிறப்புரையில், நான் படித்த பல்கலைக்கழகத்திலேயே என்னை சிறப்பு விருந்தினராக அழைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் பயின்ற காலத்தில் எப்படி சுற்றுச்சூழல் இருந்ததோ அதே சுற்றுச்சூழலும் மற்ற எல்லா வகையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளதை இன்று கண்டுகளித்தேன். மேனாள் துணைவேந்தர் நல்.இராமச்சந்திரன் அவர்கள் எங்களுக்கு ஒழுக்கத்தையும், ஊக்கத்தையும் கற்றுக் கொடுத்தவர். மாணவர்களாகிய நீங்கள் எந்தத் துறையில் சிறப்பாக செயல்படுகிறீர்களோ அந்த துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்றும் கூறினார். இக்காலத்தில் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது பாதுகாப் பாகவும் மற்றும் அதன் நன்மைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார்.
வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தலைமை உரையாற்றும் போது, நமது பல் கலைக்கழகத்தில் பயின்று இன்று இந்திய ஆட்சிப்பணியில் அமர்ந்திருக்கும் லலிதா அவர்களையும், பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று தொழில் துறையில் இன்று தொழில் முனைவோராக வந்திருக்கக்கூடிய ராஜ மகேஸ்வரி அவர்களையும் இந்த தலைசிறந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். சிறு குழந்தைகளிடம் நான் உரையாடும் போது அவர்கள் என்னவாக வரவேண்டும் என்று நான் கேட்டு இருக்கின்றேன். அதற்கு நான் ஒரு மாவட்ட ஆட்சியர், மருத்துவர், பொறியாளர் போன்றவர்களாக வரவேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் இன்று அது நிறைவேறி யுள்ளது என்றும் கூறினார். இலட்சிய இலக் குகளை பெற்ற இவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். சமூக ஊடகங்களில் மாணவர்களாகிய நீங்கள் அதிக நேரத்தை வீணாக்காதீர்கள். தேவையான அள விற்கு பயன்படுத்தி – திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்றார்.
கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர் களுக்கும், பணியில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கும் விருதுகள் வழங்கப் பட்டது. திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு கூட்டுப் பணியாளர் நல மன்றம் சார்பாக ரூ.10,000த்தை வேந்தர் அவர்களிடம் காசோலையாக வழங்கப்பட்டது.
பல்கலைக்கழக டெக்மேக் இதழ் வேந்தர் அவர்களால் வெளியிடப்பட்டு அதனை சிறப்பு விருந்தினர் ஆர். லலிதா அய்.ஏ.எஸ். பெற்றுக் கொண்டனர்.
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.வேலுசாமி நன்றியுரையாற்றினார்.