ஒசூரில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி தலைமையில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள தந்தைபெரியார் சிலை முன் வைக்கப்பட்டிருந்த அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் தி.பாலகிருஷ்ணன், சசிகுமார் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டனர்.