தினமும் காலையில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு, இதயக் கோளாறுகள், பக்கவாதம் வரும் அபாயம் மிகக் குறை வாக இருப்பதாக, மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதய ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வது நல்ல பலனைக் கொடுக்கும் என்ற அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து ஆறு – எட்டு ஆண்டுகள் கண்காணித் ததில், 2,911 பேருக்கு, கொரோனரி ரத்தக் குழாய் எனப்படும் தமனியில் கோளாறும், 796 பேருக்கு பக்கவாதமும் ஏற்பட்டது. பங்கு பெற்ற மொத்த நபர்களில், காலை 6.00 – 11.00 மணி வரை யார் சுறுசுறுப்பாக இருந்தனரோ, அவர் களுக்கு இதயக் கோளாறு, பக்கவாதம் வரும் அபாயம் குறைவாக இருந்தது. அதிகாலை அல்லது காலையில் உடல் உழைப்பு செய்தவர்களுக்கு 11 சதவீதம் மற்றும் 16 சதவீதம், கொரோனரி ரத்தக் குழாய் கோளாறு வரும் அபாயம் குறைந்து இருந்தது. காலை 9:00 மணிக்கு மேல் உடற்பயிற்சி செய்தவர்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு 17 சதவீதம் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
காலையில் உடற்பயிற்சி செய்வது, பெண்களுக்கு மிகவும் சாதகமாக இருப் பதும் உறுதியானது. இதனால், கொரோ னரி ரத்த நாளக் கோளாறு வருவது 22 – 24 சதவீதமும், பக்கவாதம் வரும் அபா யம் 35 சதவீதமும் குறைவாக இருந்தது.