புதுடில்லி, மார்ச் 13 ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். நானோ என் குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாரும் அவர்கள் முன் தலை வணங்கமாட்டோம் என்று லாலு பிர சாத் அறிவித்துள்ளார்.
டில்லி, பீகார் மாநிலங்களில், லாலு பிரசாத் மற்றும் அவரது உறவினர் களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். லாலுவின் மகன் தேஜஸ்வியின் நியூ பிரண்ட்ஸ் காலனியில் உள்ள இல் லத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது நிறைமாதக் கர்ப்பிணி யான தேஜஸ்வியின் மனைவி ராஜ் சிறீயை வலுக்கட்டாயமாக 15 நேரம் ஒரே இடத்தில் அமர வைத் துத் துன்புறுத்தியதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இந்நிலை யில், இந்த துன்புறுத்தல் குறித்து லாலு பிரசாத் டுவிட்டரில் பதி விட்டுள்ளார்.
அதில், “நான் கறுப்பு எமர் ஜென்சி காலத்தைப் பார்த்தேன், அதற்கு எதிராகவும் போராடி னேன். கர்ப்பிணி மருமகள் மட்டு மின்றி, என் பேரக் குழந்தைகள் மற்றும் மகள்களையும் அமலாக்கத் துறை நீண்ட நேரம் உட்கார வைத் தார்கள். பாஜக மிகவும் கீழ் நிலையில் இருப்பது நன்றாகத் தெரிகிறது” என்று குறிப்பிட் டுள்ளார். “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வுக்கு எதிரான எனது போராட்டம் தொட ரும். நானோ என் குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாரும் அவர்கள் முன் தலை வணங்கமாட்டோம்” என்றும் லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.