ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இவானா மோரல் என்பவர் தன் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வீட்டு வேலை செய்வதற்காகவே தன்னைத் திருமணம் செய்துகொண்டிருப்பதாக கணவர்மீது புகார் வைத்த இவானா, 25 ஆண்டுகளாக இந்த வேலையை மட்டும்தான் செய்துவந்ததாகத் தெரிவித்தார். இருவரும் சம்பாதித்த பணம் மொத்தமும் கணவருக்குத்தான் சென்றதாகவும், இதுவரை தனக்கென்று எந்தப் பணமும் அவர் அளிக்கவில்லை எனவும் புகார் தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் விவாகரத்து அளித்து இரண்டு பெண் குழந்தைகளை வளர்ப்பதற்காகவும், இதுவரை இவானா செய்த வீட்டு வேலைகளுக்காகவும் அவரது கணவர் 1.75 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஸ்பெயின் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.பெண்களுக்குப் பாதுகாப்பானது அல்லவா?