தமிழ்நாடு அஞ்சல்துறையில் 58 காலிப் பணியிடங்கள்!

2 Min Read

அரசியல்

செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, தாம்பரம், வேலூர், கடலூர், கரூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, சிறீரங்கம், திருச்சி, விருத்தாச்சலம், சென்னை, திண்டுக்கல், ராமநாதபுரம், காரைக்குடி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள இந்தியா போஸ்ட் அலுவலகங்களில் கார் ஓட்டுநர் பணிக்கான 58 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. யாரெல்லாம் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும், விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

காலிப் பணியிடங்கள்

இந்தியா போஸ்ட் அலுவலகங்களில் ஸ்டாஃப் கார் ஓட்டுநர் பணிகளுக்கு 58 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சம்பளம்

கார் ஓட்டுநர் பணிக்கு 19,900 – 63,200 ரூபாய் ஊதியம் தரப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு

UR & EWS  – 18 -27 வயது வரை

SC & ST  – 5 வருட வயது வரம்பு விதிவிலக்கு

OBC – 3 வருட வயது வரம்பு விதிவிலக்கு

கல்வித்தகுதி மற்றும் பிற விவரங்கள்

விண்ணப்பதாரர் 10ஆவது முடித்திருக்க வேண்டும்.

கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

மூன்று ஆண்டுகள் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.

வாகனங்கள் குறித்த அடிப்படை மெக்கானிக் செயல்முறைகள் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய www.indiapost.gov.in கிளிக் செய்யவும்.

அறிவிப்பை முழுமையாக படித்து விட்டு விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யவும்.

விண்ணப்பத்தோடு 100ரூபாய் மதிப்புள்ள இந்தியன் போஸ்டல் ஆர்டரை இணைக்கவும்.

அதோடு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்ப படிவத்தோடு இணைக்க பட வேண்டியவை:

    வயது சான்றிதழ்

    கல்வி சான்றிதழ்

    ஜாதி சான்றிதழ்

EWS பிரிவில் விண்ணப்பிப்பவர்கள் அதற்கான ஆதார சான்றிதழை இணைக்க வேண்டும்.

    ஓட்டுநர் உரிமம்

    அனுபவ சான்றிதழ் 

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி

The Senior Manager (JAG), Mail Motor Service, No.37, Greams Road, Chennai – 600 006  – 600 006 என்ற முகவரிக்கு 31.3.2023ஆம் தேதிக்குள் ஸ்பீட் அல்லது பதிவு அஞ்சல் வழியாக மட்டுமே அனுப்ப வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *