காஞ்சிபுரம்,மார்ச்15- காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சியில் விச்சந் தாங்கல் என்ற கிராமம் உள்ளது. இங்கு காண்டீபன் – லதா இணை யர் உள்ளனர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், அதில் கடைசி மகள் காஞ்சனாவை சென்னையில் உள்ள சரவணன் என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணம் முடிந்து இவர்களுக்கு 13 வயதில் லாவண்யா என்ற சிறுமியும், 9 வயதில் புவனேஷ் என்ற மகனும் இருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சரவணன் காஞ்சனா வுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த காஞ்சனா தற்கொலை செய்து கொண்டார். பின்னர் குழந்தைகளை தனியாக பார்த்துக் கொள்ள முடியவில்லை என்று கூறி, அவரது தாத்தா- பாட்டி (காண்டீ பன் லதா) வீட்டில் விட்டுள்ளார் சரவணன்.
இந்த நிலையில் விச்சந்தாங்கலிலுள்ள அங்காளம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வந்துள் ளது. கடந்த 12.3.2023 அன்று கடைசி நாள் விழா நடைபெற்றது. அப்போது இரவு ‘சாமி’ உற்சவ ஊர் வலத்திற் கென மாட்டு வண்டியில் அலங்கரிக்கப் பட்டு வண்ண, வண்ண மின் விளக்குகள் பொருத் தப் பட்டு அவை ஒளிர்வதற் கென மினி ஜென்ரேட் டர் வைக்கப்பட்டு ‘சாமி’ புறப்பாடானது.
அப்போது சிறுமி லாவண்யாவை அவரது தாத்தா வீட்டுக்குப் போக சொல்லியுள்ளார். இருப் பினும் சிறுமி வீட்டுக்கு செல்லாமல் அந்த மாட்டு வண்டியின் பின்புறத் தில் ரகசியமாக அமர்ந்துள்ளார். தொடர்ந்து விழாவை வேடிக்கை பார்த்து வந்த சிறுமியின் தலைமுடி அருகிலிருந்த ஜெனெரேட்டரில் சிக்கி யுள்ளது. தொடர்ந்து பல மாக அவரது முடி அதில் சிக்கி பலத்த காயமடைந் தார் சிறுமி.
இதையடுத்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், காஞ்சிபுரம் அரசு மருத் துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரி தாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மாகரல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி, பின்னர் உடலை உரியவர்களிடம் ஒப் படைத்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.