சென்னை, மார்ச் 15, வேளாண்மைத் துறையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடையே வளங்கள் குறைவாக இருந்தாலும்கூட, அவர்களுடைய வருமா னம் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க புத்தாக்கமான தொழில் நுட்பத்தில் வேளாண் பயன்பாட்டு வாகனங் களை தயாரித்து வழங்கி வரும் சோனாலிகா டிராக்டர் நிறுவனம் வளர்ச்சி கண்டுள்ளது.
இதுகுறித்து இண்டர்நேஷனல் டிராக்டர்ஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் ரமன் மிட்டல் கூறியிருப்பதாவது:- விவசாயிகளின் முதல், முதன்மை யான தேவையாக உள்ள இயந்திர தயாரிப்பின் தரத்தை கருத்தில் கொண்டு, புதுமைகளை உருவாக்குவதற்கு நாங்கள் தீவிரமாகப் பணிபுரிந்து வருகிறோம். இயந்திர மயமாக்கலை விவசாயிகள் வேகமாக கற்றுக் கொள்வதைக் கண்டு வியப்படைகிறோம். இந்த நிதியாண்டிலேயே அதிகமாக பிப்ரவரி மாதத்தில் ஒட்டுமொத்த விற்பனையாக 1,37,344 டிராக்டர்களை விற்றுள்ளதையும், நான்காவது ஆண்டாக, ராபி பருவ உணவு தானிய உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.