தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மை கொள்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியீடு

2 Min Read

அரசியல்

சென்னை மார்ச் 15-  வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக் கும் வகையிலும் ‘தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023’-அய்  (TamilNadu Organic Farming Policy) முதலமைச்சர் மு.,க.ஸ்டாலின் நேற்று (14.2.2023) வெளியிட்டார். 

ஏற்றுமதியை ஊக்குவித்து, விவசாயிகளின் வருவாயை அதி கரிப்பது அங்கக வேளாண்மை கொள்கையின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: 

2021-2022ஆ-ம் ஆண்டுக் கான வேளாண்மை – உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில், ‘அதிக அளவு பயன்படுத்தப்பட்ட ரசாயன உரங்களாலும், பூச்சிக்கொல்லி மருந்துகளாலும் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள், மண் புழுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து மண் வளம் பாதிக்கப்பட்டதோடு சுற்றுப்புறச்சூழலும் பாதிக்கப் பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடிய, இயற்கை வேளாண் விளை பொருட்களின் தேவை அதி கரித்துள்ளதோடு விழிப்புணர் வும் அவசியமாகி உள்ளது. இவற்றை கருத்தில்கொண்டு, இயற்கை வேளாண்மை தொடர் பான பணிகளை சிறப்பு கவனத் துடன் செயல்படுத்துவதற்காக, வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கு என தனிப் பிரிவு உருவாக்கப் படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

அதன் முதல்கட்டமாக, அங்கக வேளாண்மை வரைவுக் கொள்கையை உருவாக்குதற் காக வேளாண்மை – உழவர்நலத் துறை செயலர் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக் கப்பட்டுள்ளது. அக்குழுவின் மூலம் வரைவு அங்கக வேளாண்மை கொள்கை, செயல் திட்டம் மற்றும் விதி முறைகள் உருவாக்கப்பட்டுள் ளன. அங்கக வேளாண்மையின் முக்கியத்துவத்தை தமிழ்நாடு விவசாயிகள் இடையே அதி கரித்தல், நிலங்களில் ரசாயன இடுபொருட்களின் பயன் பாட்டை படிப்படியாக குறைத்து, இயற்கை இடு பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துதல், மண் வளத்தை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை வழிவகுக்கும்.

கொள்கையின் நோக்கம்: 

அங்கக வேளாண்மை கொள்கை மூலம் மண் வளம், வேளாண் சூழலியல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை பாது காத்தல் மற்றும் நிலைத்திருக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப் படும். பாதுகாப்பான, ஆரோக் கியமான மற்றும் சுற்றுச்சூழ லுக்கு உகந்த உணவை வழங் குதல், அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்தி, அங்கக வேளாண்மை நடைமுறைகள் விரிவாக்கம் செய்யப்படும். அங்கக சான் றளிப்பு முறைகள், நச்சுத் தன்மை பகுப்பாய்வு நெறி முறைகளை வலுப்படுத்துதல், பண்ணையில் உற்பத்தி செய் யப்படும் அல்லது பண்ணைக்கு அருகில் உற்பத்தி செய்யப்படும் தொழு உரம், மண்புழு உரம் போன்ற இடுபொருட்கள் ஊக்குவிக்கப்படும். மேலும், சந்தை ஆலோசனைகள், சான் றிதழ் ஆலோசனைகள் வழங் கப்படுவதுடன் ஏற்றுமதியை ஊக்குவித்து, விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பது அங் கக வேளாண்மை கொள்கை யின் நோக்கங்களாகும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *