மதுரையில் சுகாதாரத் துறையில் பணிவாய்ப்பு!

2 Min Read

மதுரை மாவட்ட சுகாதாரத் துறை கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் மூலம் சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 82 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், ஓட்டுநர் என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.63 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும்.

காலிப்பணியிடங்கள் விவரம்: மருத்துவ அலுவலர் – 3, செவிலியர் – 10, சுகாதார ஆய்வாளர் – 4, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – 19, ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் – 12, மருந்தாளர் – 2, ஏ.என்.எம். – 26, நகர்ப்புற சுகாதார மேலாளர் – 2, பிசியோதெரபிஸ்ட் – 2, ஓட்டுநர் – 1, கணக்கு உதவியாளர் – 1.

கல்வித் தகுதி: கல்வித் தகுதியை பொறுத்தவரை தகுதிக்கு ஏற்ப மாறுபடும். பொதுவாக இந்த பணிகளுக்கு 8ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பி.எஸ்சி நர்சிங், எம்.எஸ்சி நர்சிங், பி.காம், எம்பிபிஎஸ் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: பணியிடங்களுக்கு தகுந்தபடி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அலுவலர், செவிலியர், ஏஎன்ம், ஓட்டுநர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 40 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மற்ற பணியிடங்களுக்கு 35 வயதுக்கு மிகாதவர்களாக இருத்தல் வேண்டும்.

ஊதியம்: மருத்துவ அலுவலர் – ரூ.63,000, நகர்ப்புற சுகாதார மேலாளர் – ரூ.27,000, பிசியோதெரபிஸ்ட் – ரூ.23,000, செவிலியர் – ரூ.21,000, கணக்கு உதவியாளர் – ரூ.19,000, மருந்தாளர் – ரூ.18,000

சுகாதார ஆய்வாளர் – ரூ.17,500, ஏஎன்எம் – ரூ.17,500, ஓட்டுநர் – ரூ.17,500

ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் – ரூ.17,000, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – ரூ.11,000.

தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு பதவி வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?: ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மதுரை மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, நிறைவு செய்து தேவையான சான்றிதழ்களின் சுயசான்று நகல்களுடன் அஞ்சல் வழியாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சுகாதார அலுவலர் / செயல் செயலாளர், மாவட்ட சுகாதார சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், விஸ்வநாதபுரம், மதுரை – 625014.

விண்ணப்பிக்க கடைசி தேதி: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.07.2026-க்குள் தங்கள் விண்ணப்பங்கள் சென்று சேரும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.  இந்த பணியிடங்கள் நிரந்தர பணிகள் அல்ல. ஒப்பந்த அடிப்படையிலான ஒரு ஆண்டு கால பணியிடங்கள் ஆகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க:

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *