முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் 16ஆம் தேதி கூடுகிறது!

1 Min Read

 பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை

சென்னை, ஜூலை 14– த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 2ஆவது அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னையில் ஜூலை 16ஆம் தேதி நடைபெறுகிறது.

அமைச்சரவைக் கூட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் கடந்த ஜூன் 5ஆம் தேதி நடைபெற்றது. அதில் துறைவாரியாக 436 தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான (2026-2027) பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால் பொதுமக்களைக் கவரும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, புதிய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் முன்னேற்றம், பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் ஜூலை 2ஆம் தேதி தொடங்கி துறைவாரியான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தக் கூட்டங்கள் ஜூலை 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்தச் சூழலில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் 2ஆவது அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் ஜூலை 16ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் பெறப்பட உள்ளது. மேலும், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.2,500 வழங்குதல் உள்ளிட்ட சில தேர்தல் வாக்குறுதிகளைச் செயல்படுத்த அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், மேகதாது அணை விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு இறுதி முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *