ஆத்தூர், மார்ச்16-ஆத்தூர் திரா விடர் கழகத்தின் சார்பாக பெத்த நாயக்கன் பாளையத்தில் கடந்த 12.3.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் சமுக நீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் விளக்க பரப் புரை பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது.
பொதுக்குழு உறுப்பினர் அ.சுரேஷ் தலைமையில் ஆத்தூர் நகர தலைவர் வெ.அண்ணாதுரை வரவேற்றார். மாவட்ட தலைவர் த.வானவில், மண்டல செயலாளர் விடுதலை சந்திரன் முன் னிலை வகித்தனர். கழக சொற்பொழி வாளர் தஞ்சை பெரியார் செல்வம் சிறப்பு ரையாற்றினார்.
பகுத்தறிவு ஆசிரிய ரணி மாநில தலைவர் வா.தமிழ்பிரபாகரன், முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் தங்கவேல், மண்டல இளைஞரணி செயலா ளர் ப.வேல்முருகன், பகுத்தறிவா ளர் கழக மாவட்ட தலைவர்
வ.முருகானந்தம், பகுத்தறிவு ஆசிரியரணி நகரத்தலைவர் ஆசிரி யர் பழனிவேல், ஆத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவ உதவியா ளர் ஆத்தூர் செல்வம், கழகப் பொறுப்பாளர்கள், திமுக கம்யூ னிஸ்ட் கட்சி தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாவட்ட செயலாளர் நீ.சேகர் நன்றி கூறினார். இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.