16.3.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
அதானி விவகாரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத் தில் புகார் அளிக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேரணி, சந்திரசேகர ராவ் கட்சியான பி.ஆர்.எஸ். பங்கேற்பு. 144 தடை உத்தரவு: நடுவழியில் தடுத்து நிறுத்திய காவல்துறை தொடர்ந்து 3ஆவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான பட்ஜெட் நிதியை மோடி அரசு குறைப்பதற்கு, ஊரக வளர்ச்சிக்கான நாடாளுமன்ற குழு கவலை தெரிவித்துள்ளது.
தி இந்து:
ஆளுநரை நியமனம் செய்ய முதலமைச்சருடன் ஆலோசனை நடத்துவது மரபுப்படி பின்பற்றப்படலாம் என ஒன்றிய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
தி டெலிகிராப்:
பெங்களூரை தளமாகக் கொண்ட பாதுகாப்பு நிறுவனத்தின் இணை உரிமையாளராக மொரிஷியசைத் தளமாகக் கொண்ட “சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு நிறுவனம்” இருப்பதாக அறிக்கைகள் கூறியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை “தனது கூட்டாளிகளின் நிதி நலன்களுக்காக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களை தியாகம் செய்கிறாரா” என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்ப்பதற்கு ஆளுநர்கள் அரசியலின் ஒரு பகுதியாக மாறுகிறார்கள் என்று உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது
– குடந்தை கருணா