அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் 104ஆம் பிறந்த நாள், 45ஆம் நினைவு நாள், தோள்சீலைப் போராட்டம் 200ஆம் ஆண்டு விழா
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நிறைவுரை
சென்னை,மார்ச்17- அன்னை மணியம்மையாரின் 45ஆம் ஆண்டு நினைவு நாளான நேற்று (16.3.2023) மாலை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பெரியார் திடலில் அமைந்துள்ள 21 அடி உயர தந்தைபெரியார் முழு உருவச்சிலை பீடத்தில் மலர் வளையம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை – அன்னை மணியம்மையார் சாலை சந்திப்பில் அமைந்துள்ள அன்னை மணியம்மையாரின் முழு உருவச்சிலைக்கு கழக மகளிரணி, மகளிர் பாசறை தோழர்கள், கழகப் பொறுப்பாளர்கள் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. தந்தைபெரியார், அன்னை மணியம்மையார், ‘சுயமரியாதைச் சுடரொளிகள்’ நினைவிடங்களில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தப்பப்பட்டது.
பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் 104ஆம் பிறந்த நாள், 45ஆம் நினைவு நாள், தோள்சீலைப் போராட்டம் 200ஆம் ஆண்டு விழா கருத்தரங்கம் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை ஏற்பாட்டில் எழுச்சியுடன் நடைபெற்றது.
துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி வரவேற்புரை ஆற்றினார். பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தலைமையுரையாற்றினார். திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை தொடக்கவுரை ஆற்றினார்.
திராவிட மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர்வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநிலச் செயலாளர் தோழர் ஜி.மஞ்சுளா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் சுந்தரவள்ளி ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள்.
சிறப்பு விருந்தினர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தந்தை பெரியாரின் பெண்விடுதலை தொகுப்பு உள்ளிட்ட இயக்க வெளியீடுகளை வழங்கி சிறப்பு செய்தார்.
கருத்தரங்கத்தின் நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
சென்னை மண்டல மகளிரணி செயலாளர் இறைவி இணைப்புரை வழங்கினார். திராவிட மகளிர் பாசறை சென்னை மண்டல செயலாளர் த.மரகதமணி நன்றி உரை கூறினார்.கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், கழக வெளியுறவுச் செயலாளர்
கோ. கருணாநிதி, மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேசு, மாவட்ட மேனாள் நீதிபதி பரஞ்சோதி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, செயலாளர்
தே.செ.கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், செயலாளர் தி.செ.கணேசன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, சி.வெற்றிசெல்வி, மருத்துவர் மீனாம்பாள், தாம்பரம் நாகவல்லி, தேன்மொழி, பண்பொளி கண்ணப்பன், பூவை செல்வி, செல்வி முரளி, சுமதி, வெண்ணிலா, தனலட்சுமி தங்கமணி, பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், வழக்குரைஞர்கள் சு. குமாரதேவன், துரை. அருண், திராவிடன் நிதி பொது மேலாளர் அருள் செல்வன், தமிழக மூதறிஞர் குழு பொருளாளர் பொறியாளர் த.கு.திவாகரன், தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் செயலாளர் மா.செல்வராஜ், புலவர் பா.வீரமணி, பேராசிரியர் நம்.சீனிவாசன், கவிஞர் கண் மதியன், வெ.ஞானசேகரன் மற்றும் கழகப் பொறுப் பாளர்கள், மகளிரணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.