ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்போரின் கவனத்திற்கு… தமிழ்நாடு மாதிரி எங்கயுமே நிம்மதியா இருக்க முடியாது சார்!

Viduthalai
1 Min Read

ஜார்க்கண்ட் மாநில இளைஞரின் பாராட்டு!

டைல்ஸ் ஒட்டுற ஜார்க்ண்ட் பையங்கிட்ட “ஏன்டா தம்பி டெய்லி எவ்ளோ சம்பளம்?” னு கேட்டேன். “மூணுவேளை சோறு போட்டு 700 ரூவா குடுப்பாங்க சார். என்னோட செலவு போக 15 ஆயிரத்த வீட்டுக்கு அனுப்பிருவேன். எங்க குடும்பமே இப்ப சந்தோசமா இருக்காங்க சார்” ன்னான்…!!

“சரிடா தம்பி.. உங்கூர்ல உன்னோட வேலைக்கு எவ்ளோ குடுப்பானுவ?”

“120 ரூவா சம்பளம். சாப்பாடெல்லாம் போடமாட்டாங்க சார். டீய மட்டுமே குடிச்சுட்டு காலைல ஆறு மணியிலருந்து நைட்டு 8 மணிவரைக்கும் வேல பாக்கணும் சார்…”

“சரிடா தம்பி.. ஹிந்தி கத்திருந்தா வடநாட்டுல நெறையா வேலை கிடைச்சுருக்கும், பெரிய ஆளா வந்துருப்போம்னு எங்க தமிழ்நாட்டுக்காரனுவ பேசிக்குறானுவ..  ஹிந்தி கத்துக்கிட்டா அப்படி ஏதாவது பெரிய ஆளா வர வாய்ப்பிருக்கா?”

“சார்..எனக்கு வயசு 24. இதுவரை 6 ஸ்டேட்ல வேலை செஞ்சிருக்கேன். தமிழ்நாடு மாதிரி எங்கையுமே நிம்மதியா இருக்க முடியாது சார்!”

“அப்ப நாங்க ஹிந்தி கத்துக்கிட்டா வடநாட்டுல நல்ல எதிர்காலம் இருக்கா? இல்லையா?”

“சோத்துக்கே சிங்கி அடிக்கணும் சார்..”

– சமூக ஊடகத்திலிருந்து…

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *