சென்னை, மார்ச் 18- நிதி, உடல்நலம், தொழில் மற்றும் வாழ்க்கை முறை ஆரோக்கியம் அனைத்தையும் உள்ளடக்கிய ‘நன்மைகளின் திட்டத்தை’ டோரஸ் நிறுவனம் உருவாக்கிவருகிறது. இது புதிய தலைமுறை பயனாளிகளை மய்யமிட்ட உலகமாகும். ஏப்ரல் 2023 தொடக்கத்தில் ஒன் ஆப் வழியே அதன் பன்முக தயாரிப்புகளை வெளியிட டோரஸ் தயாராகி வருகிறது.
வேலைவாய்ப்பு சார்ந்த தொழில்நுட்பத் துறையில் பிரைமரோ திறன்களுடன் டோரஸ் வேகத்தைப் பெறுகிறது. இந்தியா மற்றும் மத்திய கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள 16-30 வயதுக்கு உள்பட்ட ஆர்வலர்களுக்கு புது யுகத் திறன் மற்றும் மேம்பாடு சார்ந்த சாத்தியங்களை டோரஸ் பிரைமரோ எஜூடெக் வழங்குகிறது. நாட்டிலுள்ள 40 முக்கியமான துறைகளை உள்ளடக்கி 10 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர் களுக்கு தொழில் பயிற்சி வகுப்புகளை வழங்குவதை இந்த தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏற்கெனவே பல்வேறு இடங்களில் 10,000க்கும் மேற்பட்ட வேலை களை உருவாக்கியிருப்பதன் மூலம் இது முடிவுகளை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது என இந்நிறுவன தலைவர் சாம் கோஷ் தெரிவித்துள்ளார்.