வழக்குரைஞர் அ.அருள்மொழி பங்கேற்பு
ஆவடி,மார்ச்18- ஆவடி கழக மாவட்டம் சென்னை அயப்பாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 பரிசளிப்பு விழா 2.3.2023 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களோடு கலந்து கொண்ட வழக்குரைஞர் அ.அருள்மொழி, பிரின்சு என்னாரெசு பெரியார், சி.அரசு, சண்முகநாதன் ஆகியோரை தலைமை ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள், மாணவர்கள் பள்ளியின் வாசலில் இருந்து வரவேற்றனர்.
பள்ளியின் அரங்கில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சி.கருணாகரன் தலைமையில் பெரியார் 1000 வினா-விடை பரிசளிப்பு நிகழ்ச்சி நடை பெற்றது.
அவர் தனது உரையில்: தேர்வினையும் பரிசளிப்பு நிகழ்வினையும் சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி கூறினார். பின்னர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் சி.அரசு, பிரின்சு என்னாரெசு பெரியார், சண்முகநாதன், கோவி.கோபால், பா.இராமு, ஏஜஸ் அகமது ஆகியோருக்கு பள்ளியின் சார்பாக பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்.
பெரியார் 1000 தேர்வினைப் பற்றிய அறிமுக உரையினை கோவி.கோபால் ஆற்றினார்.
தோழர் சி.அரசு தனது தொடக்க உரையில், அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்படவேண் டியதின் அவசியத்தை விளக்கினார். தந்தை பெரியார் போன்ற தலைவர்களை பற்றி இன் றைய தலை முறையினர் தெரிந்து கொண்டால் தான் அடுத்த தலைமுறை சிறப்புறும் என்றார். பள்ளியில் தேர்வு எழுதிய 200 மாணவர் களுக்கான கட்டணத்தை தானே ஏற்றுக் கொள்வதாகவும் அடுத்த ஆண்டு இன்னும் அதிக மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தனது எண்ணத்தை தெரிவித்தார்.
பள்ளியின் கட்டமைப்பிற்காக தொடர்ந்து உதவி வரும் சி.அரசு அவர்களுக்கு பள்ளியின் சார்பில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கரவொலியுடன் நன்றி தெரிவித்தனர்.
ஊடகவியலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தனது உரையில்:-
தடைகளை தாண்டி படிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத் தினார். போட்டித் தேர்வுகளுக்கு பெரியார் 1000 வினா-விடை எப்படியெல்லாம் உதவுகிறது என் பதையும், தலைவர்களைபற்றி தெரிந்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் கூறினார்.
பெரியார் 1000 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, பரிசுகள், மெடல்கள், புத்தகங்கள் போன்றவற்றை வழங்கி வழக்குரைஞர் அ.அருள்மொழி சிறப்புரை ஆற் றினார்.
அவர் தனது உரையில், அரசுப் பள்ளி மாண வர்கள் தன்னம்பிக்கையுடன் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தானும் தனது பள்ளி படிப்பு, கல்லூரிப் படிப்பு என அனைத்தையும் அரசுப் பள்ளிகளிலேயே படித்ததை நினைவு கூர்ந்தார். திராவிட இயக்கங்களினால் தமிழ் நாடு மாண வர்கள் பெற்ற, பெற்றுக் கொண்டிருக்கிற பயன் களை கூறினார். கல்வி எப்படியெல்லாம் ஒரு காலத்தில் மறுக்கப்பட்டது என்பதை மாணவர்கள் உணரும் வண்ணம் பேசினார். மறுக்கப்பட்ட கல்வி பெரியார் போன்ற தலைவர்களால் அனைவருக்கும் கிடைத்ததை நினைவு படுத்தினார். எனவே மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும், ஒழுக்கத்துடனும் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என் பதினை வலியுறுத்தி பேசினார். மாணவர்களும், ஆசிரியர்களும் ஆர்வத்துடன் செவிமெடுத் தனர் .
பள்ளி தலைமை ஆசிரியரிடம் தந்தை பெரியார் ஒளிப்படம் மற்றும் புத்தகங்களை வழக்குரைஞர் அ.அருள்மொழி, பிரின்சு என்னாரெசு பெரியார், சி.அரசு, சண்முகநாதன், ஆகியோர் வழங்கினார்கள்.
தோழர் பா.இராமு நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.