புதுடில்லி, மார்ச் 19 இந்தியாவில் ஒரே நாளில் கரோனா தொற்று பாதிப்பு 800-அய் கடந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் 17.3.2023 அன்று ஒரே நாளில் 843 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டி ருப்பவர்களின் எண்ணிக்கை 5,389 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 126 நாள்களுக்குப் பிறகு முதன்முறையாக ஒரு நாளின் பாதிப்பு எண்ணிக்கை 800-அய் கடந்துள்ளது.
ஜார்க்கண்ட், மகாராட்டிரா மாநிலங்களில் தலா ஒரு உயிரிழப்பும்,, கேரளாவில் இரண்டும் பதிவாகியுள்ளன. கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 58 ஆயிரத்து161 ஆக உள்ளது. கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 799 ஆக உள்ளது.
இதுவரை நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், 220.64 கோடி கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.