வல்லம், மார்ச் 19 தஞ்சாவூர், வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) ஆசியக் கண்டத்திலேயே மகளிருக்கான முதலாவது தனித்த தொழில்நுட்ப நிறுவனமாக 1988-இல் தொடங்கப் பட்டது.
2007 முதல் நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக உயர்ந்து “சிந்தனை செய் – புதுமை செய் – மாற்றம் செய்” (Think – Innovate – Transform) என்கிற உயர்ந்த கல்வி முழக்கத்தை முன்னிறுத்தி சிறப்பான கல்வியை வழங்கிவருவ துடன் மேம்பட்ட பல்துறை ஆய்வு களை மேற் கொள்ளும் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களுள் ஒன்றாக – மக்கள் பல்கலைக்கழகமாகச் செயல்பட்டுவரு கிறது.
“அறிவு – நேர்மை – மேன்மை” ‘ (Wisdom – Integrity – Excellence) என்கிற கல்வி முழக்கத்தை முன்னிறுத்திச் செயல் பட்டுவரும் உலகு போற்றும் மலே சியப் பல்கலைக் கழகமான டெய்லர்ஸ் பல்கலைக்கழகம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துடன் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 08.03.2023 புதன்கிழமை அன்று கையெழுத் திட்டது.
இணைய வழியில் நடைபெற்ற ஒப்பந்தக் கையெழுத்திடும் விழாவுக்கு அமெரிக்கப் பட்டப் பரிமாற்றத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் டி.முருகன் அனைவரையும் வர வேற்றார்.
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேரா. முனைவர் செ.வேலுச்சாமி, டெய்லர் பல்கலைக்கழகத்தின் (மலேசியா) சமூக அறிவியல் மற்றும் மேலாண்மை புலத் தலைவரும் இயக்குநருமான பேரா. முனைவர் அனிந்திதா தாஸ் குப்தா ஆகிய இருவரும் வாழ்த்துரை வழங் கினர். கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர் பேரா சிரியர் எம். சர்மிளா பேகம் நன்றியுரை வழங்கினார்.
மக்கள் பற்றுதலோடு அறிவியல் மற்றும் ஆய்வு மனப்பான்மையை வளர்த்து எதிர்கால இளைய தலை முறையை மனிதப் பற்றோடு கூடிய தொழில்முனைவோர்களாகவும், ஆய்வாளர்களாகவும் ஆக்கும் முயற் சியில் ஒரே நேர்க்கோட்டில் – ஒத்த கல்வி முழக்கங்களோடு பயணிக்கும் இவ்விரண்டு கல்வி நிறுவனங்களுக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது வர லாற்றுத் தேவை எனக் கருதப்படுகிறது.
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை (றிவிமிஷிஜி) இப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத் திடுவதற்கான அனைத்து ஏற்பாடு களையும் செய்தது.