வெற்றி பெறுவதற்கான வியூகம்: ஆர்.எஸ்.எஸ்.,சிடம் விவரித்த நட்டா!

2 Min Read

சென்னை, மார்ச் 21- வரும் 2024 மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் பான்மை பெறுவதற்கான வியூகங்கள், திட்டங்களை, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களிடம், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா விவரித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்., தேசிய பொதுக்குழு கூட்டம், கடந்த 12, 13, 14 ஆகிய தேதிகளில், அரியானா மாநிலம், சமல்காவில் நடந்தது.

பொதுக்குழுவில் ஆர்.எஸ்.எஸ்., மாநில அமைப்பாளர்கள், மாநில செயலர்களிடம், அவரவர் மாநிலங்களின் அரசியல் சூழல், பா.ஜ.,வின் செயல்பாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது. பொதுக்குழு வுக்கு இடையில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹொசபலே, பா.ஜ., தலைவர் நட்டா உள்ளிட்டோர் தனி ஆலோசனை நடத்தினர்.

‘வரும் 2025 இல் ஆர்.எஸ்.எஸ்., நூற்றாண்டு விழா நடக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியராக இருந்த மோடி, அந்த நேரத்தில் பிரதமராக இருக்க வேண்டும்.

நாக்பூரில் நடக்கும் நூற்றாண்டு விழாவில், அவர் பங்கேற்க வேண்டும்’ என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

அப்போது, 2024 மக்களவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்க, கட்சி தலைமை வகுத்துள்ள வியூகங்கள், திட்டங்களை, பா.ஜ., தலைவர் நட்டா எடுத்துக் கூறியுள்ளாராம்.

மகாராட்டிரா, மேற்கு வங்கம், பீகார், கருநாடகா போன்ற மாநிலங்களில், 2019 இல் பெற்ற இடங்களை மீண்டும் பெறுவது சவாலாக இருக்குமாம். மகாராட்டிரா, பீகாரில் கூட்டணியை இழந்துள்ளோம். அகிலேஷ்,- மாயாவதியுடன்- காங்கிரஸ் சேர்ந்தால், உ.பி.,யில் சிக்கலாகுமாம். 

‘எனவே, இந்த மாநிலங்களில் புதிய கூட்டணி அமைப்பது, எதிர்க்கட்சி கூட்டணியை பலவீனப் படுத்துவது, ஓட்டுச்சாவடி அளவில் பா.ஜ.,வை பலப்படுத்துவது உள்ளிட்ட வியூகங்கள் வகுக்கப்பட்டு உள்ளன’ என, நட்டா தெரிவித்துள்ளாராம்.

‘சிரியன் கத்தோலிக்கர்கள் பா.ஜ.,வுக்கு ஆதரவாக மாறியிருப்ப தால் கேரளாவிலும்; கூட்டணியால் தமிழ்நாடு, ஆந்திராவிலும் குறிப்பிடத்தக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற முடியும்’ என, நட்டா நம்பிக்கை தெரிவித்துள்ளாராம். 

இதற்காக பெரிய கட்சிகள் மட்டுமல்லாது, ஓட்டு வங்கி உள்ள சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கவும், மக்கள் செல்வாக்கு மிக்க சமுதாய தலைவர்கள், சினிமா, விளையாட்டுப் பிரபலங்களை தேர்தல் பணியில் பயன்படுத்தும் முயற்சிகளை துவங்கியிருப்ப தாகவும் நட்டா தெரிவித்துள்ளாராம். 

‘ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரையும் வாக்குச்சாவடி அளவில் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்’ என, மோகன் பாகவத்திடம், நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *