தமிழ் ஏன் கோவில் மொழி ஆக்கப்பட வேண்டும்?

4 Min Read

கரூரில் ஒரு மாநாடு!

திருநெல்வேலியில் தமிழ்  மொழிக்கு எதிராக நின்றவர்களை கண்டித்து  பேரூர் ஆதீனத்தில் கண்டன கூட்டமும், தமிழ் மொழியை ஏன் கோவில் மொழி ஆக்க வேண்டும் என்ற ஆலோசனை கூட்டமும் என இரு கூட்டங்கள் பேரூர் ஆதீனம்   தலைமையில் நடைபெற்றன. இதன் முடிவில் 25.3.2023   அன்று கரூரில் “தமிழ் மொழி ஏன் கோவில் மொழி ஆக்கப்பட வேண்டும்”  என்ற தலைப்பில் ஒரு நாள் மாநாடு நடத்துவது என்று முடிவு செய்யப் பட்டது  – அதை ஒரு பார்வை பார்க்கலாம் வாங்க!   

கோவில் வழிபாட்டு மொழியாக தமிழ் மொழி இருக்க வேண்டும், அதுவும் தமிழ் ஆகம விதிப்படி தான் நடத்த  வேண்டும்,. அது தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று

பேரூர் ஆதீனம் 

சிரவை ஆதீனம் 

குன்றக்குடி ஆதீனம்  ஆகியோர்

தலைமையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு குழு அமைத்து அதற்கான முதல் கருத்து கேட்புக் கூட்டத்தை திருநெல்வேலியில்  ஏற்பாடு செய்து இருந்தது தமிழ்நாடு அரசு.

இது போல் கருத்து கேட்புக் கூட்டம் நடத்த வேண் டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்து இருந்தார். 

கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு நடை பெற்ற போது குடமுழுக்கில் தமிழ் மொழியா  – சமஸ்கிருதமா என்ற கேள்வி எழுந்தது.  அந்த வழக்கு நீதிமன்றம் சென்ற போது மக்கள் மன நிலை தமிழ் மொழி யில் தான் குட முழுக்கு நடத்த வேண்டும் என்று இருக்கிறது – அதற்கான கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்துங்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்

திருநெல்வேலி கூட்டம் ஆரம்பத்தில் நன்றாகத் தான் போய்க் கொண்டு இருந்தது. திடீரென ஹிந்து அமைப்பை சேர்ந்த தமிழர்கள் எழுந்து திராவிட இயக்கம் சார்ந்த வர்கள் நடத்தும் கூட்டம். இவர்கள் ஹிந்து மதத்துக்கு எதிரானவர்கள் என்று தவறாகக் புரிந்து கொண்டு கூச்சல் போட்டு குழப்பம் ஏற்படுத்தினர்கள் 

ஆனால்  இறை வழிபாட்டில் உச்சம் தொட்ட  அடியார்கள் ஆன  மூன்று மிகச் சிறந்த ஆதீனங்கள் மேடையில் அமர்ந்து  இருக்கும் போது இறை நம் பிக்கை உள்ள ஹிந்து அமைப்பை சேர்ந்த தமிழர்கள் கூச்சல் போடலாமா? இது தவறு இல்லையா? 

200 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்துவ, முஸ்லிம் படை எடுப்பில் இருந்து கோவிலையும், நமது மர பையும் காத்து இன்று வரை தங்களை இறைவனுக்காக அர்ப்பணித்து வழி வழியாக வாழும் மூன்று மடாதி பதிகள் முன் ஹிந்து அமைப்பை சேர்ந்த தமிழர்கள் இப்படிக் கூச்சல் போடலாமா? இது தவறு இல்லையா?

அதுவும் தமிழ் மொழி கோவில் இறை வழிபாட்டு மொழியாக ஆக வேண்டும் என்று நடைபெற்றுக் கொண்டு இருக்கும் கூட்டத்தில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த தமிழர்கள் ஆகிய நாம் இப்படி செய்யலாமா? 

நமது தமிழ் மொழி இறை வழிபாட்டு மொழி ஆகுவது நமக்கு மகிழ்ச்சி தரக் கூடிய செய்தி தானே  – பின் ஏன் இந்த கூச்சல்?

சரி இது அவர்கள் நடத்திய கூட்டம் – அவர்கள் ஹிந்து மதத்துக்கு எதிரானவர்கள். நீங்கள் ஹிந்து அமைப்பை சேர்ந்த தமிழர்கள் ஒரு கூட்டம் போடுங்கள் – அந்தக் கூட்டத்தில் தமிழ் மொழி கோவில் இறை வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும் என்று தீர்மானம் போடுங்கள். அந்த தீர்மானத்தை கோவில் கோவிலாக சென்று இதை நடை முறைப் படுத்த வேண்டும் என்ற சொல்லுங்கள். 

இதை நீங்கள் செய்து விட்டால் மற்றவர்கள் ஹிந்து கோவில் வழிபாட்டு முறைக்குள் வர மாட்டார்கள் 

இதை செய்வீர்களா?

“தமிழ் மொழி இயற்கை தந்த மொழி

தமிழ் மொழி இறைவன் பேசும் மொழி” என்று தமிழ் இறை அருளாளர்கள் சொல்கிறார்கள்!

இறைவன்மீது  பல இலட்சம் பாடல்கள் பாடப் பெற்ற மொழி தமிழ்மொழி. இவ்வளவு ஏன், தனி ஒருவராக தவத்திரு தண்டபாணி சாமிகள் மட்டும் ஒரு லட்சம் பாடல்கள் பாடி இருக்கிறார்?

‘வேதம் நான்கும் தமிழில் சமைத்து உலகுக்கு தந்தது தமிழ்நாடு’ என்று மகாகவி பாரதியாரும், ‘தமிழ் ஆகமமாய் நின்றாய் போற்றி’ என்று மாணிக்கவாசகரும் பாடுவதை எடுத்துக்காட்டி தமிழ் மொழியில் அனைத் தும் உள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.

அதுமட்டுமல்ல, ஆகமம் என்பது தமிழர் களுடையது தான்,  தமிழ் நாட்டில் மட்டும் நடை முறையில் உள்ளது, வட கேரளா, வட ஆந்திரா, வட கருநாடகா போன்ற இடங்களில் ஆகமங்கள் இல்லை – அதுக்கு அந்தப் பக்கம் இமயமலை வரை இல்லவே யில்லை, தமிழ் மொழியில் இருந்து சமஸ்கிருத மொழியில் தப்பும் தவறுமாக மொழி பெயர்த்து விட்டு இப்போது ஆகமம் தமிழர்களுடையது இல்லை என்று சொல்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் கோவிலில் தமிழில் வழிபாடு செய்வது ஹிந்து மதத்தைச் சேர்ந்த தமிழர்களின் உரிமை – அதை நிலை நாட்ட ஹிந்து அமைப்பை சேர்ந்த தமிழர்கள் உரிமைக் குரல் எழுப்புங்கள்!

சமுதாய மருத்துவர்

ந.நித்தியானந்தபாரதி 

நிறுவன தலைவர், கணபதி தமிழ்ச்சங்கம் 

பசுமைக் காப்பகம், உலக வேல் வழிபாடு மன்றம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *