கந்தர்வக்கோட்டை மார்ச் 22- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச் சிப்பட்டியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் விழிப்புணர்வு கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.
எண்ணும் எழுத்தும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டது. சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்ட வட்டார வள மய்ய மேற்பார்வையாளர் (பொறுப்பு)பிரகாஷ் பேசியதாவது
எண்ணும் எழுத்தும் திட்டம் ஒன்று முதல் மூன்று வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செயல் படுத்தப்பட்டு வருகிறது. குழந்தை களின் அறிவு சார்ந்த வளர்ச்சி , உடல் சார்ந்த வளர்ச்சி, உள்ளம் சார்ந்த வளர்ச்சியை அடிப்படை யாகக் கொண்டு செயல்பட்டு வரு கிறது.
அடிப்படை திறன்களை மாண வர்கள் அறிந்து கொள்ளும் வித மாக எண்ணும் எழுத்தும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு மாணவர்களின் கற்றல் மேம் பாட்டிற்கு வழிவகை செய்கிறது. குழந்தைகள் தங்கள் கற்றல் திறனை வெளிப்படுத்த எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறை சிறந்த பயனுள்ள தாக அமைந்துள்ளது.
எண்ணும் எழுத்துக் கொண் டாட்டத்தில் பெற்றோர்களும், மாணவர்களும் இணைந்து வகுப் பறை செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும். தங்கள் குழந்தைகளின் கற்றல் எண்ணும் எழுத்துக்கு முன் பும், பின்பும் எவ்வாறு மாறி உள்ளது என்பதை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வும், அடிப்படை திறன்கள் தமிழ் ,ஆங்கிலம், கணிதம் உள்ளிட்டவை களை மாணவர்கள் கற்க வேண்டும் எனவும் பேசினார்.இல்லம் தேடிக் கல்வி திட்ட ஒன்றிய ஒருங்கி ணைப்பாளர் ரகமதுல்லா எண் ணும் எழுத்தும் திட்டத்தில் நடை பெறும் கற்பித்தல் முறைகள் குறித்தும், இல்லம் தேடிக் கல்வி, புதுமைப்பெண் திட்டம்,காலை உணவு திட்டம் குறித்து பேசினார்.
எண்ணும் எழுத்தும் மாணவர் களுக்கான கற்பித்தல் உபகரணங் கள் மற்றும் கொண்டாட்டம் நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் வெள்ளைச்சாமி, செல்வி ஜாய், நிவின் ஆகியோர் தயாரித்து காட்சி படுத்தினார். இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவி இலக்கியா, துணைத் தலைவி வேதநாயகி, வார்டு உறுப்பினர் கலாராணி,முதுகுளம் ஆங்கில ஆசிரியர் அருண் வாலன் டைன், ஆசிரியைகள் மணிமேகலை, பகுதி நேரம் ஆசிரியைகள் கவுரி, தனலெட்சுமி, பெற்றோர்கள் கலந்து கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டத்தில் கற்பித்தல் உபகரணங்களை பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். மாணவ, மாணவிகள் ஆடல், பாடல் பாடி மகிழ்ந்தனர் . நிறைவாக எண்ணும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத் திய முதல்வருக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.