தருமபுரி அருகே தொல்லியல் துறை சார்பில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் உள்ள பகுதியை பாதுகாக்க வேலி

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

தருமபுரி, நவ.4- தருமபுரி அருகே பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் அடங்கியுள்ள பகுதியைச் சுற்றி தொல்லியல் துறை சார்பில் பாது காப்பு வேலி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பங்குநத்தம் கிராமத்தின் அருகே 2 சிறு கரடுகள் உள்ளன. இந்த கரடுகளை உள்ளடக்கிய 24.85 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் பெருங் கற்கால ஈமச் சின்னங்களான கல் வட்டங்கள் அமைந்துள்ளன. 10 முதல் 20 அடி வரையிலான விட்டங் கள் கொண்டவையாக இங்கு 100-க் கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருந் துள்ளன.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இறந்தவர்களை அடக்கம் செய்து அப்பகுதியைச் சுற்றி பெரிய கற் களைக் கொண்டு இந்த கல்வட்டங் கள் அமைக்கப்பட்டுள்ளன. புதை யல் தேடுபவர்கள், சமூக விரோத நபர்கள் போன்ற சிலரால் இந்த கல் வட்டங்கள் அவ்வப்போது சிதைக்கப் பட்டு வந்துள்ளன.

மேலும், வேளாண் தேவைகளுக் காகவும் இப்பகுதி நிலம் ஆங்காங்கே உள்ளூர் மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. இதற்கிடையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வட்டங்கள் அமைந்துள்ள இப் பகுதியை, புராதன சின்னங்கள் மற் றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் எச்சங்கள் என்ற சட்டத்தின்கீழ் தமிழ்நாடு தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து, 24.85 ஹெக் டெர் நிலப்பரப்பு அளவீடு செய்யப் பட்டு உள்ளூர் மக்களின் பயன்பாட் டில் இருந்து மீட்கப்பட்டது. மேலும், இப்பகுதியைச் சுற்றி பல இடங்களில் தமிழ்நாடு  தொல்லியல் துறை சார் பில் பாதுகாக்கப்பட்ட பகுதி என் பதை வலியுறுத்தும் அறிவிப்பு பல கைகளும் நிறுவப்பட்டன.

இருப்பினும், இப்பகுதியில் மது அருந்துவோர் போன்ற வெளி நபர் களின் நடமாட்டத்தை முழுமையாக தடுக்கும் நோக்கத்தில் தற்போது இப் பகுதியைச் சுற்றி அடிமட்ட சுற்றுச் சுவர் அமைத்து அதன் மீது இரும்பி னாலான 5 அடி உயரம் கொண்ட வேலி அமைக்கும் பணி தொடங்கப் பட்டுள்ளது.

தொல்லியல் துறையின் சென்னை அலுவலக உதவி பொறியாளர் ராஜேஷ் என்பவர் மேற்பார்வையில் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதிக்கு ஏற்ப சுற்றுச் சுவர் மற்றும் கிரில் வேலி அமைக்கும் பணி அண்மையில் தொடங்கி நடந்து வருகிறது. அடுத் தடுத்த நிதி ஒதுக்கீடுகளில் மொத்த பரப்பைச் சுற்றிலும் சுற்றுச் சுவருடன் கூடிய கிரில் வேலி அமைத்துவிட முடியும்’ என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *