22.3.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* காங்கிரஸ் உள்ளடக்கிய எதிர்க்கட்சிகள் ஒற்றுமையே பாஜகவை வீழ்த்தும் என்கிறார் கல்கத்தாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஷிகா முகர்ஜி.
* தேர்தல் பத்திரம் குறித்த வழக்கை அரசியல் சட்ட அமர்வுக்கு அனுப்புவது குறித்து உச்சநீதிமன்றம் விரைவில் முடிவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தன் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை கூறும் ஆளும் பாஜகவினருக்கு பதிலளிக்க வாய்ப்பு தரும்படி மக்களவைத் தலைவருக்கு ராகுல் மீண்டும் கடிதம்.
தி இந்து:
* அமலாக்கத்துறை உள்ளிட்ட அரசின் அமைப்புகளை மோடி அரசு தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து நீதிமன்றத்தில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் இணைந்து மனு தாக்கல் செய்ய ஆம் ஆத்மி முயற்சி.
தி டெலிகிராப்:
* கருநாடகா ஷிமோகாவில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தின் நுழைவாயில் அருகே இஸ்லாமியர் தொழுகை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டு மூத்திரம் தெளித்து சங் பரிவார் கும்பல் சுத்திகரிப்பு செய்தனர்.
* பஞ்சாப் நேஷனல் வங்கியில் 7,080 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, 2018 ஆம் ஆண்டு நாட்டை விட்டுத் தப்பி ஓடிய வைர வியாபாரி சோக்சிக்கு எதிராக “ரெட் நோட்டீஸை” இண்டர்போல் திரும்பப் பெற்றதற்கு காங்கிரஸ் மோடி அரசு மீது குற்றம் சாட்டியுள்ளது.
* ஹிந்துத்வா சாவர்க்கரின் பொய்களால் கட்டமைக்கப் பட்டது உள்ளிட்ட கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்ட கன்னட நடிகர் சேத்தன் குமார் கருநாடக காவல்துறை கைது செய்தது.
– குடந்தை கருணா