கல்லக்குறிச்சி, மார்ச் 22- கல்லக்குறிச்சி மாவட்டத்தில், கல்லக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை மற்றும் தியாகதுருகம் ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் விவ சாயிகள் பயன்பெறும் வகையில் தேசிய வேளாண்மை கூட்டுறவு கூட்டமைப்பு மூலமாக அரசினால் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்த பட்ச ஆதரவு விலையான குவிண் டால் ரூபாய் 6600க்கு உளுந்து கொள்முதல் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் வெளிச்சந்தை விலையினைவிட கூடுதல் விலை விவசாயிகளுக்கு கிடைக்கிறது.
இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன் பெறும் பொருட்டு இத்திட்டத்தின் மூலம் 01.03.2023 முதல் துவங்கி 29.05.2023 (90 நாட்கள்) வரை உளுந்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இத்திட்டத் தின் மூலம் பயன்பெறவுள்ள விவ சாயிகள் மேற்கண்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் முன்பதிவு செய்து, உளுந்து விற்பனையின் போது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கிக்கணக்கு எண் ஆகிய விவரங்கள் சமர் பிக்கவேண்டும். பரிவர்த்தனைப் பணிகள் முடிவுற்றவுடன் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உட னடியாக பணம் வரவழைக்கப்படும். ஆகவே உளுந்து சாகுபடி செய் துள்ள இம்மாவட்ட விவசாயிகள் அனைவரும், அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங் கள் மூலமாக விற்பனை செய்து கூடுதல் வருவாய் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இத்திட்டம் 29.05.2023 வரை மட்டுமே செயல்படுத்தப்படும் என்பதால் உளுந்து அறுவடை செய்யும் மற்றும் இருப்பு வைத் துள்ள விவசாயிகள் உளுந்து ஒரு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6600க்கு என்கிற உயர்ந்தபட்ச விலைக்கு விற்பனை செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.