சீத்தாராம் யெச்சூரி சாடல்
புதுடில்லி, மார்ச் 22- பிஎம்கேவிஒய் திட்டத்தின் கீழ் சான்றி தழ் பெற்றவர்களில் வெறும் 22% இளைஞர்க ளுக்கு மட்டுமே உண்மை யில் வேலை கிடைத்தது. மோடி அரசின் கொள் கைகள் அனைத்தையும் வீணடிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச் சூரி குற்றம் சாட்டியுள் ளார்.
இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தகுதி உள்ளவர்களாக தயார்படுத்துவது மற்றும் அவர்களின் பணிசார் திறன்களை மேம்படுத் துவது, குறிப்பாக கிரா மப்புற மற்றும் வேலை வாய்ப்பற்ற இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான தகுதியை ஏற்படுத்தவும், அமைப்புசாரா துறைகளில் தினக்கூலி அடிப்படையில் வேலை பெற்று வரும் இளைஞர் களின் திறன்களை மேம் படுத்தவும் கடந்த 2015-ஆம் ஆண்டு மோடி அரசாங்கத்தால் பிரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா (PMKVY) என்ற பெயரில் வேலைப் பயிற்சித் திட்டம் துவங்கப் பட் டது. இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுபவர் களுக்கு சான்றிதழ் வழங் கப்பட்டு வேலைக் கான அங்கீகாரமும் கொடுக் கப்படுகிறது.
பிஎம்கேவிஒய் திட்டம் 2015_-2016, 2016_-2020, 2020_-2022 என இதுவரை மூன்று கட் டங்களைக் கண்டுள்ளது. முதல் கட்டத்தில் (2015-_2016) 19.86 லட்சம் பேர் பயிற்சி பெற்று 18.4% பேர் வேலைவாய்ப்பு பெற்றனர்.
இரண்டாவது கட்டத்தில் (2016_-2020 நான்காண்டுகள்) 1.9 கோடி பேர் பயிற்சி பெற்று 23.4% பேர் வேலை வாய்ப்பு பெற்ற னர். மூன்றாம் கட்டத்தில் (2020- _2022) 4.45 லட்சம் பேர் பயிற்சி பெற்று வெறும் 10.1% மட்டுமே வேலை வாய்ப்பை பெற் றுள்ளனர். ஒவ்வொரு கட்டத்திலும் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் விகிதம் வெகுவாக சரிந்து வருகி றது. (இரண்டாம் கட் டம் 4 ஆண்டுகளை கொண்டது. அதனால் அதிக புள்ளி விபரங்களை கொண்டது)
பிஎம்கேவிஒய் திட்டத்தில் வேலை வாய்ப்பிற்கான சாதகமான சூழல் இருப்ப தாக தெரியவில்லை. பிசினஸ் ஸ்டாண்டர்ட் ஆய் வறிக்கையின் படி பிஎம்கேவிஒய் திட்டத் தில் பயிற்சியளிக்கப்பட்டு சான்றளிக்கப்பட்டவர் களில் நான்கில் ஒருவர் மட்டுமே அதாவது வெறும் 22.2% மட்டுமே வேலைவாய்ப்பை (மார்ச் 14, 2023 வரை) பெற்றுள் ளனர். இந்த திட்டத்தில் பயிற்சி பெறுபவர்கள், வேலைவாய்ப்பு பெறுப வர்களின், எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் வெகுவாக குறைந்து வரு கிறது.
பிஎம்கேவிஒய் திட்டத்தில் 36 மாநிலங்க ளில் (யூனியன் பிரதேசம் சேர்த்து) இட ஒதுக்கீடு அடிப்படையில் லடாக் (யூனியன் பிரதேசம்) (57.65 சதவீதம்), மிசோ ரம் (41.16 சத வீதம்), பஞ்சாப் (39.26 சதவீதம்), சிக்கிம் (38.32 சதவீதம்) மற்றும் புதுச்சேரி (34.09 சதவீதம்) ஆகிய மாநிலங் கள் மட்டுமே ஓரளவு வேலை வாய்ப்பைப் பெற் றுள்ளன. நாட்டின் பங்குச் சந்தை உள்ள மாநிலமான மகாராட் டிரா 10%-க்கும் குறை வான அதாவது வெறும் 8.93% பிஎம்கேவிஒய் வேலைவாய்ப்பை பெற்றுள்ளது. யூனியன் பிரதேசங்களான அந்த மான் நிக்கோபார் 4.22 சதவீதம் மட்டுமே. ஒன் றிய அரசு கட்டுப்பாட் டில் ஆளப்படும் லட்சத் தீவில் ஒருவர் கூட இது வரை (0%) பிஎம்கேவிஒய் திட்டத்தில் பயன் பெற வில்லை.
பிஎம்கேவிஒய் திட்டத்தின் மூன்றாவது கட்டம் (2020_-2022) முடிவடைந்து ஓராண் டைக் கடந்துவிட்ட நிலையில், நான்காவது திட்டம் தொடங்குவ தற்கான எவ்வித அறிவிப் பையும் மோடி அரசு உறுதியாக வெளியிட வில்லை. ஒன்றிய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் தர்மேந் திர பிரதான் கடந்த வாரம் நாடாளு மன்றத் தில் நான்காவது கட்ட திட்டம் விரைவில் தொடங்கப்படும் என பெயரளவில் கூறினார்.
இந்நிலையில் பிஎம்கேவிஒய் திட்டத்தின் உண்மை நிலவரம் குறித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி குற்றம் சாட்டி யுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “பகட்டுப் பிரச்சாரமும் மற்றும் ஆரவாரமும் ஒருபோ தும் ஒன்றையும் வழங் காது. கவுசல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சான்றிதழ் பெற்றவர் களில் வெறும் 22% இளைஞர் களுக்கு மட் டுமே உண்மையில் வேலை கிடைத்தது. மோடி அரசின் கொள் கைகள் இளைஞர்களின் சக்தியையும், இந்தியாவின் மாபெரும் மக்கள் வளத்தையும் வீணடிக்கிறது” எனக் கூறியுள்ளார்.