பேரறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் கண்டறியும் விழிப்புணர்வு முகாம்

3 Min Read

அரசியல்

காஞ்சிபுரம், நவ. 4- காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை சார் பில் புற்றுநோய் கண்டறிதல் விழிப்புணர்வு முகாமினை  மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் நாடாளு மன்ற உறுப்பினர் செல்வம், மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலர சன் ஆகியோர் துவக்கி வைத் தனர்.

மேலும் புற்றுநோய் கண்டறி யும் முகாம்கள், காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு வட்டார மருத்துவமனைகள் மற்றும் அரசு தலைமை மருத்து வமனைகளில் தினசரி நடத்தப் பட்டு வந்தன. இம் முகாம்களில், பிரதானமாக, வாய் மற்றும் தொண்டை புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், ஆகியவற்றுக்கான கண்டறிதல் சோதனைகள் நடத் தப்பட்டு வந்தன.இதில் செவிலியர்கள் புற்றுநோயை கண்டறி வது மற்றும் தடுப்பது குறித்து பதாகைகளை ஏந்தியவாறு செவிலியர்கள் அப்பகுதி முழு வதும் பேரணியாக சென்றனர். 

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  தெரிவித்தி ருப்பது :

காஞ்சிபுரம், அரசினர் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி  நிலையம், 1969-ஆம் ஆண்டில், பேரறிஞர் அண்ணாவின் நினைவாக தொடங்கப்பட்டதாகும். இந்நிலையில் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக மட்டுமின்றி, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற் றுப்புற மாவட்டங்களில், புற்று நோய் கண்டறிதல், புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணி களுக்காக தனித்தன்மையுடன் தொடங்கப்பட்டதாகும். தேசிய புற்றுநோய் தடுப்பு திட்டத்தில் கீழ் இந்நிலையம் தொடங்கப் பட்டு, மேற்கண்ட பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. 

இதன் ஒரு பகுதியாக, புற்று நோய் கண்டறியும் முகாம்கள், காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யங்கள், அரசு வட்டார மருத்து வமனைகள் மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகளில் தினசரி நடத்தப்பட்டு வந்தன. 

இம் முகாம்களில், பிரதான மாக, வாய் மற்றும் தொண்டை புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், ஆகியவற்றுக்கான கண்டறிதல் சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன.

அவ்வாறு நடத்தப்பட்ட முகாம்கள் மூலம், 2013-ஆம் ஆண்டு வரையில், 2,39,811 நபர் களுக்கு PAP SMEAR பரிசோத னைகள் செய்யப்பட்டு, 3377 நபர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளதென உறுதி செய்யப் பட்டு, உரிய நபர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 

மேலும், 2522 நபர்களுக்கு ஆரம்ப நிலை புற்றுநோய் அல்லது புற்றுநோயாக இருக் கலாம் என்ற அய்யம் உள்ளதென தெரிய வந்து, அந்த நபர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு,  சிகிச் சைக்கு பரிந்துரை செய்யப் பட்டது.

2013ஆம் ஆண்டு முதல் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்து வமனையில் மட்டும் தினசரி முகாம் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வந்தன. அவ்வாறு நடத் தப்பட்ட முகாம்கள் மூலம், 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில், 37603 நபர் களுக்கு PAP SMEAR பரிசோத னைகள் செய்யப்பட்டு, 1260 நபர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளதென உறுதி செய்யப் பட்டு, உரிய நபர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.  

தற்போது, இந்நிலையத்திற் கென, திருப்பெரும்புதூரில் செயல்பட்டு வரும், இண்டியா யமஹா மோட்டார்ஸ் லிமிடட் நிறுவனத்தின் மூலம் அவசர ஊர்தி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தினை உப யோகப்படுத்தி, இம்முகாம் பணி களை, மீண்டும் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் தடையின்றி சிறப்பாக நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என அந்த செய்தி  குறிப்பில் குறிப் பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *