சென்னை, மார்ச் 23- நாட்டின் முதலாவது ‘பி.எம்.மித்ரா’ மெகா ஜவுளிப் பூங்காவை விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரம் கிராமத்தில் அமைப்பதற்கான தொடக்க விழா சென்னையில் நடந்தது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சர் பியுஷ் கோயல் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 1,052 ஏக்கர் சிப்காட் நிலத்தில் ரூ.2,000 கோடியில் அமையும் இந்த மெகா ஜவுளிப் பூங்காவால் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்ததகத் துறை, ஒன்றிய ஜவுளி அமைச்சகம் சார்பில் நாட்டிலேயே முதலாவதாக பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை பூங்காவை (பி.எம்.மித்ரா) விருதுநகர் மாவட்டம் இ.குமார லிங்கபுரம் கிராமத்தில் அமைப்பதற் கான தொடக்க விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நேற்று (22.3.2023) நடந்தது.
இந்த விழாவில், முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின், ஒன்றிய வர்த்தகம், தொழில், ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் முன்னி லையில் 11 பெரும் தொழில் நிறுவனங் களுடன் 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் ரூ.1,231 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன் 6,315 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக் கப்படுகிறது. 1,052 ஏக்கர் சிப்காட் நிலத் தில் இந்த ஜவுளிப் பூங்கா அமைகிறது.
விழாவில் பங்கேற்றவர்கள் பேசிய தாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: நாட்டின் முதலாவது பி.எம்.மித்ரா பூங்கா, தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று அறிவித்த பிரதமர் மோடிக்கும், ஒன்றிய ஜவுளித் துறை அமைச்ச்£ பியூஷ் கோயலுக்கும் நன்றி.
நம் நாட்டின் கைத்தறி துணை வர்த்தகத்தில், தமிழ்நாடு மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறது. பெருமளவு பருத்தி நூல் தயாரிப்பு, ஏற்றுமதி செய்யும் மாநிலமாக இருப்பதால், ‘இந்திய நாட்டின் நூல் களஞ்சியம்‘ என்று அழைக்கப்படுவதோடு, நூற்பு, கைத்தறி நெசவு, விசைத்தறி நெசவு, ஆயத்த ஆடை, ஆடை தயாரிப்பிலும் முதன்மை யான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
தமிழ்நாட்டில் இந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தை சிப்காட் நிறுவனம் மூலம் செயல்படுத்த வேண்டும் என்று பிரதமருக்கும், ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சருக்கும் கடநத் 18ஆம் தேதி கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத் தேன். அதை நினைவூட்ட விரும்புகி றேன். இக்கோரிக்கையை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும்.
அதேபோல, சேலத்தில் அமைய உள்ள ஜவுளிப் பூங்காவுக்கு ஒருங் கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டம் (SITP) மீற்றும் ஒருங்கிணைந்த செய லாக்க மேம்பாட்டுத் திட்டத்தில் (IPDS) இருந்து ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல்: தமிழ்நாட்டில் நாட்டின் முதல் பி.எம்.மித்ரா பூங்காவை தொடங்கி வைப்பதில் மிக்க மகிழ்ச்சி. இதற்காக பிரதமர் மோடிக்கும், இந்த மாபெரும் திட்டம் தமிழ்நாட்டுக்கு வருவதற்காக அத் தனை முயற்சிகள், ஒத்துழைப்பை நல்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கும் நன்றி.
விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளித் தொழில் நேரடியாக 4 கோடி பேருக்கும், மறைமுகமாக 6 கோடி பேருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கிறது.
இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களில் ரூ.70 ஆயிரம் கோடி யில் அமைக்கப்படும மெகா ஜவுளிப் பூங்காக்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். விருதுநகர் அருகே இ.குமாரலிங்கபுரம் கிராமத்தில் ரூ.2,000 கோடியில் அமைக்கப்படும் மெகா ஜவுளிப் பூங்கா மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த ஜவுளிப் பூங்கா பெரிதும் பயனளிக்கும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
விழாவில் ஒன்றிய ஜவுளி மற்றும் ரயில்வே துறை இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், ஒன்றிய தகவல் ஒலிபரப்புப் துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில் துறை அமைச் சர் தங்கம் தென்னரசு, கைத்தறித் துறை அமைச்சர் ஆர். காந்தி, மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.