வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஈரோட்டில் 28இல் பேரணி கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 23- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

 தந்தை பெரியார் பங்கெடுத்து வெற்றி கண்ட வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் வருகிற 30ஆம் தேதி தொடங்கி நடத்து வதென கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி முடிவு செய் திருக்கிறது. மார்ச் 30ஆம் தேதி நடைபெறுகிற தொடக்க விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜுன கார்கே பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார். இதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வைக்கம் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் கேரள மாநில காங்கிரஸ் சார்பாக வருகிற 28ஆம் தேதி காலை 10 மணிக்கு நினைவு பேரணி நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பேரணியை நான் கொடியசைத்து தொடக்கி வைப்பதோடு, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினரும், காங்கிரஸ் மேனாள் தலைவருமான ஈ.வெ.கி.ச. இளங்கோவன் இப்பேரணிக்கு தலைமை வகித்து சிறப்பிக்க இருக்கிறார். ஈரோட்டில் தொடங்குகிற இந்நினைவுப் பேரணி மார்ச் 29ஆம் தேதி பாலக்காடு வழியாக அன்று மாலை வைக்கம் சென்றடைகிறது. இந்த நினைவுப் பேரணி செல்லுகிற இடங்களில் வரவேற்க,பேரணியில் பங்கு கொள்கிற வர்கள் தங்குவது உள்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு ஈ.வெ.கி.ச. இளங்கோவன் தலைமையில் விழாக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. குழுவில் உள்ளவர்கள் வைக்கம் போராட்ட நூற்றாண்டு நினைவுப் பேரணி மகத்தான வெற்றி பெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *