திருவண்ணாமலை, மார்ச் 23 திருவண் ணாமலை கோவிலுக்கு சொந்தமான இடம் மற்றும் அம்மணி அம்மன் மடம் ஆகிய வற்றை ஆக்கிரமித்து வைத் திருந்த பாஜக ஆன்மிக பிரிவை சார்ந்த சங்கர் கைது செய்யப் பட்டார் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தை அபக ரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலம் மீட்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு நிலத்தை அபகரித் தவர் களில் பெரும்பாலானோர் பாஜக பிரமுகர்கள் மற்றும் ஏதாவது ஒரு வகையில் பாஜகவோடு தொடர்புடைய வர்களாக உள்ளவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது. இந்த நிலை யில் திருவண்ணாமலையில். சுமார் 50 கோடி ரூபாய் மதிப் புடைய 23,800 சதுரடி பரப்பளவு உள்ள இடம் சுமார் 20 ஆண்டு களாக மேனாள் இந்துமுன்னணி மற்றும் தற்போது பிஜேபி யை சேர்ந்த சங்கர் என்பவரால் ஆக் கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
நீதிமன்ற உத்தரவுபடி நடை பெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது இது குறித்து அனைத்து நாளிதழ்களிலும் செய்தி வந்திருந்தது, இந்த நிலையில் சங்கர் என்பவர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த அரசு அதிகாரிகளை மிரட்டி நான் யார் தெரியுமா? இந்த அரசுக்கு (திமுக) என்ன அதிகாரம் உள்ளது என்று தெரியாமல் எங்களோடு விளையாடு கிறது, அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடுங்கள், நாங்கள் மத்தியில் ஆட்சியில் இருக்கி றோம், நாங்கள் நினைத்தால் என்ன ஆகும் என்பதை புரிந்து கொண்டு எனது இடத்தின் மீது கைவையுங்கள் என்று மிரட்டி யுள்ளார்.
மேலும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற் றும் மாவட்ட ஆட்சியர் மாவட் டத்தைச்சேர்ந்த மாநில அமைச் சர் ஒருவரையும் தரக்குறைவாக பேசியதோடு மட்டுமல்லாது, இந்து சமயஅறநிலையத்துறை அதிகாரிகளை தரக்குறைவாக பேசியுள்ளார். இந்த நிலையில் அறநிலையத்துறை அதி காரிகள் இது குறித்து காவல்துறையில் புகார் கொடுத்தனர். இதனால் தாம் கைதுசெய்யப்பட்டு விடுவோம் என்று அஞ்சி திருப் பதிக்குச் சென்று கூட்டத் தோடு கூட்டமாக மண்டபத்தில் தங்கி விட்டார். இருந்தாலும் அவரது அலை பேசி எண்ணை வைத்து அவர் இருக்கும் மண்டபத்தினை அடை யாளம் கண்டு தமிழ்நாடு தனிப்படை காவல்துறையினர் திருப்பதியில் கைது செய்தனர்.