11.3.2023 அன்று ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கை
‘‘ஏழாவது அட்டவணையில் உள்ள மாநில அரசின் அதிகாரங்கள் – (சட்டம் இயற்ற) என்ற பிரிவில், 34 ஆவது தலைப்பாக, Betting and Gambling என்று உள்ளது கூடத் தெரியாமலா தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு அந்த அதிகாரம் கிடையாது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி கூறுகிறார்!
இது தவறு, மாநில அரசுக்கு அந்த அதிகாரம் உண்டு” என்று ஆசிரியர் கி.வீரமணி அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் (11.3.2023).
21.3.2023 அன்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் இப்பொழுது அதையேதான் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தி.மு.க. உறுப்பினர்
எஸ்.ஆர்.பார்த்திபன் ஆன்-லைன் சூதாட்டத் தடை சட்டம் குறித்து எழுப்பிய கேள்விக்கு,
ஒன்றிய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் ‘‘ஆன்லைன் சூதாட்டங்களை தங்களது வரம்பிற்குள் கொண்டு வர தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது” என்று ஒன்றிய அமைச்சர் பதில் அளித்தார்.
அன்று ஆசிரியர் சொன்னார்; இன்று ஒன்றிய அமைச்சர் சொல்கிறார் – வழிமொழிகிறார்!