கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் நடுச்சாலையில் தாக்கப்பட்டு வரும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அவர்களுக்குத் தெரியாத நபர்களை விட தெரிந்த நபர்கள் தான் பெண்களை பொதுச்சாலை என்று கூட பார்க்கமால் சரமாரியாகத் தாக்கி வருகின் றனர். அந்த வகையில் உத்தரப் பிரதேசம் நொய்டாவில் இளம் பெண்ணை, ஒருவர் நடுச்சாலையில் தாக்கிய காட்சிப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெண் மீது தாக்குதல்
நொய்டா – டில்லி மங்கோல்புரி மேம் பாலம் அருகே ஒரு பெண்ணை, ஒருவர் அடித்து காரில் வலுக்கட்டாயமாக அமர வைக்கும் காட்சிகள் அப்பதிவில் இடம் பெற்றிருந்தன. இந்த காட்சிப் பதிவானது இணையத்தில் வேகமாகப் பரவியது. இதனால் டில்லி காவல்துறை இந்த நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்தி, அந்த காரின் பதிவு எண்ணை கண்டுபிடித்தனர். அந்த கார் குரு கிராமில் உள்ள ரத்தன் விஷாரில் பதிவு செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதனை அடுத்து, அந்த பெண்ணை தாக்கிய ஆண் நபர் யார்? என்ன காரணத் திற்காக தாக்கினார் என்பது தொடர்பான விவரங்கள் குறித்து காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட் டுள்ளனர்.
இந்த நிகழ்வு தொடர்பாக காவல் துறை யினர் கூறுகையில், ”மங்கோல்புரி மேம் பாலம் அருகே 18.3.2023 அன்று இரவு 9.40 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரோகினி என்ற பகுதியில் இருந்து விகாஸ் புரிக்கு இரண்டு ஆண்களும், ஒரு பெண் ணும் வாடகைக் காரில் வந்துள்ளனர். வழியில் மூவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் நீடித்த நிலையில், அந்தப் பெண் காரில் இருந்து இறங்கி யுள்ளார். இதனால் காரில் பயணித்த ஒருவர் அந்தப் பெண்ணை அடித்து வலுக் கட்டாயமாக காரில் அமர வைத்ததாக” காவல் துறை யினர் தெரிவித்தனர்.
சுவாதி மலிவால் கண்டனம்
இந்த நிகழ்வு தொடர்பாக மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மலிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”ஒரு பெண்ணை இதுபோன்று தாக்குவது கண்டனத்திற் குரியது. இது பற்றி டில்லி காவல்துறைக்கு தாக்கீது அனுப்பப்படும். பெண்ணை கொடூரமாக தாக்கிய நபர் களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சுவாதி மலிவால் தெரிவித்துள்ளார்.