புண்’ணாக்கு!’
*உ.பி.யில் முஸ்லிம் சமுதாய மக்களை காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வந்தன. பா.ஜ.க. அரசுதான் அவர்களது முன்னேற்றத்திற்குப் பாதை அமைச்சு கொடுத்திருக்கு.
– ‘தினமலர்’, 22.3.2023
>>அப்படியா? நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தல்களிலும் எத்தனை முஸ்லிம்கள் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனராம்? ஒன்றிய அமைச்சரவையில் ஒரே ஒரு அமைச்சராவது உண்டா?
கிடந்தது கிடக்கட்டும்!
*ராமன் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக் கூறும் மனுவை அவசர அவசரமாக விசாரிக்க முன்வரவேண்டும்.
– சு.சாமி, உச்சநீதிமன்றத்தில் மனு
>>கிடந்தது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மணையில் வை என்ற கதைதான்.