“சட்டப்பேரவையில் ஜனநாயக முறைப்படி பேச அனுமதிப்பவர்கள் நாங்கள்!”

1 Min Read

 ராகுல் காந்தி பதவி நீக்கத்தை உதாரணம் கூறிய அமைச்சர் துரைமுருகன்!

அரசியல்

சென்னை, மார்ச் 25- சட்டப் பேரவையில் நேற்று (24.3.2023) நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத் தில் உறுப்பினர்கள் பங்கேற்றுப் பேசினார்கள்.

இறுதியாகப் பேசிய போளூர் தொகுதி அ.தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தமக்கு ஒதுக்கப்பட்ட நேர அளவைக் கடந்து, பிற்பகல் 2.45 மணி ஆன போதும் பேசிக் கொண்டேயிருந் தார். அவரை, பேச்சை முடிக்குமாறு பேரவைத் தலைவர் எவ்வளவோ கேட்டுக்கொண்டபோதும், நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தபோது குறுக்கிட்ட அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் குறிப்பிட்டதாவது:-

சார், இவ்வளவு நேரமான பிறகும், ஜனநாயக முறைப்படி, பேரவைத் தலைவர் அவர்கள் உங்களைப் பேச அனுமதித்திருக் கிறார்கள்.

ஆனால், பேசியதற்காகவே, இப்போது ராகுல் காந்தி அவர்களை Membership லிருந்தே எடுத்து விட்டார்கள். He has been disqualified by Parliament from the Membership of Lok Sabha

பேரவைத் தலைவர்:

Member of Parliament லிருந்து எடுத்துவிட்டார்கள்.

அமைச்சர் துரைமுருகன்: நாங் கள் அப்படியில்லை, சார் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பேசுங்கள் என்று நாங்கள் சொல் கிறோம். இவ்வாறு துரைமுருகன் குறிப் பிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *