சென்னை, மார்ச் 25 சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் நிர்பயா திட்டத்தின் கீழ் மாணவிகளின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில், பூப்பந்து அல்லது கூடைப்பந்து மைதானங்களை புதிதாக கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. ஜூடோ, கராத்தே போன்ற பிற விளையாட்டுகள் மூலம் தற்காப்பு பயிற்சியுடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அரசு பள்ளி மாணவிகளின் விளையாட் டுத்திறனை ஊக்குவிக்கும் வகையில் நிர்பயா திட்டத்தின் கீழ் சுமார் 30 மாநகராட்சி பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி விளையாட்டு மைதானங்களை புதிதாக கட்ட நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
மைதானங்கள் அமைக்க பள்ளிகளில் போதுமான இடவசதி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஏற்கனவே மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு நிர்பயா திட்டத்தின் கீழ் சானிட்டரி நாப்கின் களை மாநகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.
இதேபோல, மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த 2 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சமாக அதிகரித்து இருந்தது. இம் முறை அந்த எண்ணிக்கை 98 ஆயிரமாக குறைந்துள்ளது. எனவே, மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வரும் கல்வி ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்க உள்ளோம். அரசு பள்ளிகளில் உள்ள சிறப்பான திட்டங்கள் குறித்து ஆசிரியர்கள் மூலம் பெற்றோர்களுக்கு நேரடியாக சென்று எடுத்துக்கூற திட்டமிட்டுள்ளோம்.
-இவ்வாறு அவர் கூறினார்.
இதய நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு காப்பீட்டில் சிகிச்சை தொடர
குடும்ப அட்டை வழங்க உத்தரவிட்ட ஆட்சியர்
பெரம்பலூர், மார்ச் 25- பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையைச் சேர்ந்தவர் அருண் சற்குணம்(43). திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வரும் இவருக்கு, இதய நோய் பாதிப்பு உள்ளது. இதற்காக 5 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ சிகிச்சைக்குச் சென்றபோது, அதிகம் செலவாகும் என தெரியவந்தது.
இதையடுத்து, முதலமைச்சர் காப்பீட் டுத் திட்டத்தில் சிகிச்சை பெற முடிவு செய்து, காப்பீடு அட்டை கோரி விண்ணப் பித்தார். ஆனால், அருண் சற்குணத்திடம் குடும்ப அட்டை இல்லாததால், காப்பீடு அட்டை பெற முடியவில்லை. மேலும், அவரது வீட்டுக்கு அலுவலர்கள் விசார ணைக்குச் சென்றபோது அவர் திருப்பூரில் இருந்தது தெரியவந்ததால், அவரது விண் ணப்பம் நிராகரிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக சிகிச்சை பெற போதிய வசதியின்றி அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில், அருண் சற்குணம் ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் மனு வுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, அலுவலகம் வந்த ஆட்சியர் க.கற்பகம், அவரை அழைத்து விசாரித்தார். அதைத் தொடர்ந்து, ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஒரு மணி நேரத்தில் அருண் சற் குணத்துக்கு குடும்ப அட்டை, முதல மைச்சர் மருத்துவக் காப்பீட்டு அட்டை ஆகியன வழங்கப்பட்டன. இதை சற்றும் எதிர்பாராத அருண் சற்குணம், கண்ணீர் மல்க ஆட்சியரை சந்தித்து நன்றி தெரிவித்தார்.