புதுடில்லி, மார்ச் 26- மக்களவையில் நிதி மசோதா விவாதம் இன்றியே நிறைவேறியுள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்த 64 திருத் தங்கள் சேர்க்கப்பட்டன.
செலவின மசோதா
நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் பட்ஜெட் தாக்கல் செய் தார். பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடந்து வந்தது. பின்னர் சமீபத்தில், பட்ஜெட் டில் அறிவிக்கப்பட்ட ரூ.45 லட் சம் கோடி செலவி னங்களுக்கான செலவின மசோதா, எவ்வித விவாதமும் இன்றி மக்களவை யில் நிறை வேற்றப்பட்டது.அதானி விவகாரத்தில் நாடா ளுமன்ற கூட்டுக்குழு விசார ணைக்கு உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சி கள் அமளியில் ஈடுபட்டதால், விவாதம் இன்றி நிறைவேறி யது.
நிதி மசோதா தாக்கல்
இந்தநிலையில், மக்களவை கூடியவுடன், அதானி பிரச்சி னையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இருக் கைக்கு செல்லுமாறு மக்கள வைத் தலைவர் ஓம் பிர்லா வலி யுறுத்தினார். அதை ஏற்காமல் முழக்கம் எழுப்பிக் கொண்டி ருந்த தால், மக்களவைத் தலைவர் பகல் 12 மணிவரை சபையை ஒத்தி வைத்தார்.
பகல் 12 மணிக்கு சபை கூடியபோதும், எதிர்க்கட்சி கள் அமளியில் ஈடுபட்டன. நாடா ளுமன்ற கூட்டுக்குழு அமைக்கக் கோரும் பதாகைகளை காண் பித்தனர்.
அப்போது சபையை நடத்திய ராஜேந்திர அகர்வால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அமளிக் கிடையே, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி மசோ தாவை தாக்கல் செய்தார். இது, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி திட்டங்களை அமல்ப டுத்த சபையின் ஒப்புதலை கோரும் மசோதா ஆகும்.
64 திருத்தங்கள்
நிதி மசோதாவில், ஒன்றிய அரசு தரப்பில் 64 திருத்தங்களை யும் ஒன்றிய நிதியமைச்சர் கொண்டு வந்தார். அவற்றில், சில குறிப்பிட்ட வகை கடன் பரஸ்பர நிதியத்துக்கான நீண் டகால வரிச்சலுகைகளை திரும் பப் பெறுவது, ஜி.எஸ்.டி. மேல் முறையீட்டு தீர்ப்பாயம் அமைப் பது ஆகியவை தொடர்பான திருத்தங்களும் அடங்கும்.
64 திருத்தங்களுடன் 20 புதிய உட்பிரிவுகளும் நிதி மசோதாவில் சேர்க்கப்பட்டன.
ஒத்திவைப்பு
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட் டுக் கொண்டிருந்ததால், விவா தம் ஏதுமின்றி நிதி மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. குரல் ஓட்டெ டுப்பில் நிறை வேறியது. அப்போதும் அமளி நீடித்த தால், சபையை நடத்திய ராஜேந்திர அகர்வால், சபையை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத் தார். இனி, நிதி மசோதா, மாநிலங் களவைக்கு அனுப்பி வைக்கப் படும்.
நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு
தேசிய ஓய்வூதியத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக ஒன்றிய நிதித்துறை செயலாளர் தலை மையில் ஒரு குழு அமைப்பதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 24.3.2023 அன்று அறிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில் நிதி மசோதாவை நிறைவேற்றுவதற்காக அறிமுகம் செய்தபோது இந்த அறிவிப்பை அவர் வெளியிட் டார்.
அப்போது அவர் கூறியதா வது:- ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினையை ஆராய்வதற்கும், பொதுமக்களைப் பாதுகாப்பதற் காக நிதி விவேகத்தைப் பேணுவதுடன் ஊழி யர்களின் தேவை களை நிவர்த்தி செய்யும் அணுகு முறையை உருவாக்கவும் நிதித் துறை செயலாளரின் கீழ் ஒரு குழு அமைக்கப்படுகிறது. ஒன் றிய அரசு மற்றும் மாநில அரசு கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இந்த அணுகுமுறை வடிவமைக் கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
எனவே இந்த குழுவானது தேசிய ஓய்வூதியத்திட்டத்தில் இணைந்தவர்களின் கவலைகள், பிரச்சினைகளை ஆராய்ந்து, அது தொடர்பான பரிந்துரைகளை அரசிடம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.