ரிசிவந்தியம், மார்ச் 26- கல்லக்குறிச்சி மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் ரிசிவந்தியம் ஒன்றிய அளவிலான திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 23.3.2023 அன்று வியாழன் காலை 11 மணிக்கு, அரியலூர் கம்மங்காட்டு திட லில் நடைபெற்றது.
கலந்துரையாடல் கூட்டத் திற்கு கல்லக்குறிச்சி மாவட்ட கழக துணைத் தலைவர் திரா விட சசி தலைமை தாங்கினார். விழுப்புரம் மண்டல திராவிட மாணவர் கழக தலைவர் எஸ். இ. ஆர். திராவிட புகழ், கல்லகக் குறிச்சி மாவட்ட கழகத் தலைவர் ம.சுப்பராயன், அரி யலூர் கிளைக் கழக தலைவர் வே.கோதண்டபாணி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர் கழக அரியலூர் கிளைக் கழக அமைப்பாளர் கோகுல் வரவேற்புரை ஆற் றினார். இக்கூட்டத்தில் அ.ராமச்சந்திரன், மோனிஷா,
ஏ விக்னேஷ் குமார், வி. சந்துரு, எஸ். மனோஜ் குமார், சத்யா கோதண்டபாணி, கே ஹரி ஹரன், சபீதா, ஏ மகேஸ்வரி உள்ளிட்ட 27 தோழர் தோழி யர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் பொதுவாக தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு, பெண் உரிமை பற்றி கலந்துரையாடப்பட்டது. இறுதியில் சங்கராபுரம் நகர திராவிட மாணவர் கழக அமைப்பாளர் மா ஏழுமலை நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.