திருப்பத்தூர், நவ.4- திருப்பத் தூர் மாவட்ட கழக காப் பாளர் பெரியார் பெருந் தொண்டர் இரா.நரசிம் மன் அவர்களின் வாழ்வி ணையரும், வேலூர் மாந கர கழக தலைவர் ந.சந் திரசேகரன் மற்றும் இரா வணன், மணியம்மை சர வணன் ஆகியோரின் தாயா ருமான ஜகதாம்மாள் நேற்று (3.11.2023) காலை 6 மணியளவில் இயற்கை எய்தினார்.
அவரது இறுதி நிகழ்வு சோலையார்பேட்டை, இடையம்பட்டி அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 4.30 மணியளவில் எவ்வித மதச் நிகழ்வகள் இல்லா மல் கழக தோழர்கள் அம் மையாரை சுமந்து சென்று அடக்கம் செய்து வீர வணக்கம் செலுத்தினர்.
இந்நிகழ்வில் திருப்பத் தூர் மாவட்ட கழக தலைவர் கே.சி.எழிலர சன், மாநில மகளிரணி பொருளாளர் எ.அகிலா, தலைமைக் கழக அமைப் பாளர் திராவிட மணி, மாவட்ட செயலாளர் பெ.கலைவாணன், விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் மு.ந.அன் பழகன் மாநில இளைஞ ரணி துணைச் செயலாளர் சி.எ.சிற்றரசன், மாவட்ட துணைத் தலைவர் தங்க அசோகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சி.தமிழ்ச்செல் வன், மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் அன்பு, நகர தலைவர் காளிதாஸ், மாவட்ட மக ளிரணி அமைப்பாளர் விஜயா அன்பழகன், மாவட்ட மகளிரணித் தலைவர் சாந்தி, மாவட்ட எழுத்தாளர் மன்ற தலைவர் நா.சுப்புலட்சுமி, சோலையார்பேட்டை நகர செயலாளர் பாண்டி யன், நகர அமைப்பாளர் ராஜேந்திரன், கந்திலி ஒன்றிய தலைவர் பெ.ரா. கனகராஜ், கந்திலி ஒன்றிய செயலாளர் நாகராசன், நகர அமைப்பாளர் க. முருகன், மாவட்ட மாண வர் கழகத் தலைவர் உல கன், மாணவர் கழகச் செய லாளர் தமிழ்ச்செல்வன், பகுத்தறிவாளர் பீமன், வேலூர் மாவட்ட தலை வர் இரா.அன்பரசன், குடியாத்தம் நகர தலைவர் சி.சாந்தகுமார், பொதுக் குழு உறுப்பினர் வி.இ. சிவக்குமார், வேலூர் மாவட்ட மகளிரணித் துணைத் தலைவர் பெ. இந்திராகாந்தி, வாணியம் பாடி நகர தலைவர் அன் புச் சேரன், ஆம்பூர் நகர தலைவர் க.ரவி, மாவட்ட துணைத் தலைவர் மா. பன்னீர்செல்வம், மாத னூர் ஒன்றிய தலைவர் வெற்றி, மாதனூர் ஒன்றிய செயலாளர் வெங்கடே சன் ஆகியோர் காலை முதல் இறுதி நிகழ்வு வரை இந் நிகழ்வில் கலந்து கொண்டு அம் மையாருக்கு வீர வணக்கம் செலுத்தினர்.
இதனிடையே மாலை 4.00 மணியளவில் திருப் பத்தூர் மாவட்ட தலை வர் கே.சி எழிலரசன் தலை மையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.இதில் பங்கேற்ற அனைத்து மாவட்டத்தை சேர்ந்த தோழர்களும், உறவினர் களும் சுயமரியாதைச் சுடரொளி ஜகதாம்மாள் அவர்கள் இயக்கத்திற்காக சிறை சென்றது மற்றும் தன் வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார் அவர் களின் கொள்கை ஏற்று வாழ்ந்தது குறித்து நினைவு கூர்ந்து, அவரை போன்று அனைவரும் பகுத்தறிவு வாழ்க்கை நெறியை பின் பற்றி வாழ வேண்டும் என்று இரங்கல் உரை யாற்றினார்.